பகவான் பிர்சா முண்டா பிறந்த இடமான ஜார்கண்டில் உள்ள உலிஹாட்டு கிராமத்திற்குச் சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்கு பயணம் செய்த முதல் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பிர்சா முண்டாவின் கிராமமான உலிஹாட்டுவில் அவரை வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த புண்ணிய பூமி எவ்வளவு சக்தியால் நிரம்பியுள்ளது என்பதை இங்கு வந்த போது உணர்ந்தேன். இந்த மண்ணின் ஒவ்வொரு துகளும் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது”.
भगवान बिरसा मुंडा जी के गांव उलिहातू में उन्हें शीश झुकाकर नमन करने का सौभाग्य प्राप्त हुआ। यहां आकर अनुभव हुआ कि इस पावन भूमि में कितनी ऊर्जा-शक्ति भरी है। इस मिट्टी का कण-कण देशभर के मेरे परिवारजनों को प्रेरित कर रहा है। pic.twitter.com/ystNxiHm13
— Narendra Modi (@narendramodi) November 15, 2023