பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களை பார்வையிட்டார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்குள்ள யானை பாகர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் கலந்துரையாடினார். முகாமில் யானைகளுக்கு உணவளித்தார். ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள யானைக் காவலர்களுடனும் பிரதமர் உரையாடினார்.
தொடர் ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"இயற்கையான பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காலை நேரத்தைக் கழித்தேன். இந்தியாவின் வனவிலங்குகள், இயற்கை அழகு மற்றும் பன்முகத்தன்மையை கண்டு களித்தேன்."
"பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து இன்னும் சில காட்சிகள்." என்று படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
"முதுமலை புலிகள் காப்பகத்தில் கம்பீரமான யானைகளுடன்." என வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"அற்புதமான பொம்மனையும் பெல்லியையும், பொம்மி மற்றும் ரகுவுடன் சந்திப்பதில் எத்துணை மகிழ்ச்சி."
பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"பிரதமர் நரேந்திர மோடி பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்துக்கு வருகிறார்." என்று சரணாலயம் வரும் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
Spent the morning at the scenic Bandipur Tiger Reserve and got a glimpse of India’s wildlife, natural beauty and diversity. pic.twitter.com/X5B8KmiW9w
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
Some more glimpses from the Bandipur Tiger Reserve. pic.twitter.com/uL7Aujsx9t
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
With the majestic elephants at the Mudumalai Tiger Reserve. pic.twitter.com/ctIoyuQYvd
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
What a delight to meet the wonderful Bomman and Belli, along with Bommi and Raghu. pic.twitter.com/Jt75AslRfF
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
The Prime Minister’s Office tweeted:
“PM Narendra Modi is on the way to the Bandipur and Mudumalai Tiger Reserves.”
PM @narendramodi is on the way to the Bandipur and Mudumalai Tiger Reserves. pic.twitter.com/tpPYgnoahl
— PMO India (@PMOIndia) April 9, 2023