மியான்மர் நாட்டில் பகன் நகரில் ஆனந்தா கோவிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்றார்.
இது 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட புத்தர் கோவிலாகும். பகான் மாகாணத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோவில் இது. இந்தக் கோவிலில் கட்டமைப்பின் பழமையைப் பேணுதல் மற்றும் கலை நுட்பங்களுக்கு ரசாயன பாதுகாப்பு அளித்தல் பணிகளை இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதம் ஏற்பட்டதற்குப் பிறகு, மீட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவிலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்டமைப்புப் பணிகளை காட்சிப்படுத்தும் புகைப்படங்களின் விளக்கம் பிரதமருக்கு காண்பிக்கப்பட்டது. பிரதமர் அங்கு வழிபாடு செய்துவிட்டு கோவிலை சுற்றி வந்தார். அங்கு மேற்கொள்ளப்படும் மீட்டமைப்பு செயல்பாடுகளை இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் அவருக்கு விளக்கினர்.
கோவிலில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அனந்த கோவிலை மீட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பைக் குறிப்பிடும் வகையிலான நினைவுக் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
ஆசியாவில் பல்வேறு நாடுகளில் பழமையைப் பேணும் பணிகளை இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை மேற்கொண்டுள்ளது. ஆனந்தா கோவிலைத் தவிர, ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தா கோவில், கம்போடியாவில் அங்கோர்வாட் கோவில், டா புரோஹம் கோவில், லாவோசில் வாட் பாவ் கோவில், வியட்நாமில் மை சன் கோவில் ஆகியவையும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
Connecting with history. PM @narendramodi pays respects at Ananda Temple,the most historical and venerated temple in Bagan, Myanmar. pic.twitter.com/UGNHQgdoIJ
— Raveesh Kumar (@MEAIndia) September 6, 2017