பிரதமர் திருநரேந்திர மோடியும்பிரதமர் திருலாரன்ஸ் வோங்கும், செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் துறையில் முன்னணி சிங்கப்பூர் நிறுவனமான ஏஇஎம்-ஐ பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏஇஎம்-ன் பங்களிப்புஅதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவுக்கான திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டதுசிங்கப்பூர் செமிகண்டக்டர் தொழில்துறை அமைப்பு, சிங்கப்பூரில் செமிகண்டக்டர் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்ததுஇந்தத் துறையைச் சேர்ந்த பல்வேறு  சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 2024 செப்டம்பர் 11-13 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா கண்காட்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கான நமது முயற்சிகள் மற்றும் இந்தத் துறையில் சிங்கப்பூரின் வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுஇருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான 2-வது வட்டமேஜை கூட்டத்தில்இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படையாக செமிகண்டக்டர்களில் கவனம் செலுத்தும் மேம்பட்ட உற்பத்தியை சேர்க்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டனஇந்தியா-சிங்கப்பூர் செமிகண்டக்டர் சூழல் கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இரு தரப்பினரும் இறுதி செய்துள்ளனர்.

 

சிங்கப்பூரில் பயிற்சி பெற்று வரும், ஒடிசாவின் உலக திறன் மையத்தைச் சேர்ந்த இந்திய பயிற்சியாளர்கள்சிஐஐ-தொழில்துறை சிங்கப்பூர் இந்தியா ஆயத்த அறிவாற்றல் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு வருகை தந்த சிங்கப்பூர் பயிற்சியாளர்கள் மற்றும் ஏஇஎம்-ல் பணிபுரியும் இந்திய பொறியாளர்களுடன் இரு பிரதமர்களும் கலந்துரையாடினர்.

 

இரு பிரதமர்களின் இந்தப் பயணம், இந்தத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறதுஇந்தப் பயணத்தில் தம்முடன் இணைந்ததற்காக, பிரதமர் திருவோங்கிற்கு, பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார்.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi