பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை அனைவரும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, பழங்குடியினர் கௌரவ தினம் என்பது தாய்நாட்டின் கௌரவம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாப்பதில் நமது பழங்குடியின சமூகங்களின் ஒப்பிடமுடியாத வீரம் மற்றும் தியாகத்தின் சின்னமாகும் என்று என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“பழங்குடியினர் கௌரவ தினம் தாய்நாட்டின் மரியாதை மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்க நமது பழங்குடி சமூகங்களின் ஒப்பற்ற துணிச்சலையும் தியாகத்தையும் குறிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய இந்த உரையை நாட்டு மக்கள் அவசியம் கேட்க வேண்டும்...”
जनजातीय गौरव दिवस मातृभूमि के सम्मान और स्वाभिमान की रक्षा के लिए हमारे आदिवासी समुदायों के अतुलनीय शौर्य और बलिदान का प्रतीक है। इस अवसर से जुड़ा माननीय राष्ट्रपति जी का राष्ट्र के नाम ये संबोधन देशवासियों को जरूर सुनना चाहिए… https://t.co/VFyQUF77qy
— Narendra Modi (@narendramodi) November 15, 2024