இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் திரு பரித் மாமுண்ட்சே, சுட்டுரையில் தெரிவித்த தகவலுக்கு பிரதமர் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய டாக்டரை சந்தித்தது குறித்த நெகிழ்ச்சியான அனுபவத்தை ஆப்கானிஸ்தான் தூதர் சுட்டுரையில் தெரிவித்திருந்தார். சிகிச்சை பெற வந்தவர் ஆப்கானிஸ்தான் தூதர் என்பதை அறிந்த இந்திய மருத்துவர் அவரிடம் கட்டணம் பெற மறுத்துள்ளார். சகோதரரிடம் நான் கட்டணம் வசூலிக்க மாட்டேன் என இந்திய மருத்துவர் கூறியுள்ளார். இந்த சுட்டுரை இந்தியில் இருந்தது. ஆப்கானிஸ்தான் தூதர், சுட்டுரையில் பகிர்ந்து கொண்ட இந்த சம்பவத்துக்கு கருத்து தெரிவித்த பிரதமர், இந்த சம்பவத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவின் நறுமணம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் தூதரின் சுட்டுரைக்கான கருத்துக்களில், அவர் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஹரிபுராவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்கு ஆப்கானிஸ்தான் தூதரை செல்லும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இன்று தேசிய மருத்துவர்கள் தினம்.
आप @BalkaurDhillon के हरिपुरा भी जाइए और गुजरात के हरिपुरा भी जाइए, वो भी अपने आप में इतिहास समेटे हुए है। मेरे भारत के एक डॉक्टर के साथ का अपना अनुभव आपने जो शेयर किया है, वो भारत-अफगानिस्तान के रिश्तों की खुशबू की एक महक है। https://t.co/gnoWKI5iOh
— Narendra Modi (@narendramodi) July 1, 2021