ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
காசநோய் அற்ற பஞ்சாயத்து முன்னெடுப்பை பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்;
ரூ.1780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்
இந்தத் திட்டங்கள் வாரணாசியின் நிலப்பரப்பை மேலும் மாற்றியமைத்து நகர மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

பிரதமர் திரு ரேந்திர மோடி ஏப்ரல் 24 அன்று வாரணாசி செல்லவுள்ளார். காலை 10.30 மணிக்கு ருத்ரகாஷ் மாநாட்டு அமையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார். நண்பகல் 12 மணிக்கு சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ரூ.1780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

ஒரே உலகம் காசநோய் மாநாடு

உலக காசநோய் தினத்தையொட்டி ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார். இம்மாநாட்டிற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், காச நோய் தடுப்பு கூட்டாண்மை  அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.  கடந்த 2001-ம் ஆண்டு நிறுவப்பட்ட காச நோய் தடுப்பு கூட்டாண்மை அமைப்பு, காச நோயால் பாதிக்கப்பட்ட நாடுகள், சமூகம், மக்களின் குரல்களை பிரதிபலிக்கும் ஐநாவின் அமைப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் காச நோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார். காசநோய்க்கான குறுகிய காசநோய் தடுப்பு சிகிச்சை; காசநோய்க்கான குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மாதிரியின் அதிகாரப்பூர்வ இந்திய அலுவல் மற்றும் இந்தியாவின் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிடவுள்ளார். காசநோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பிரதமர் விருது வழங்கவுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

காசநோய் ஒழிப்பு நோக்கங்களை அடைவதற்கான நாட்டின் இலக்கை நிறைவேற்ற ஒரே உலகம் காசநோய் மாநாடு வாய்ப்பை அளிக்கும். தேசிய காசநோய் ஒழிப்பு திட்டங்களில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகளை எடுத்துக்காட்ட இது வாய்ப்பு அளிக்கும் இம்மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் சர்வதேச  பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வாரணாசியில் வளர்ச்சி முன்னெடுப்புகள்

கடந்த 9 ஆண்டுகளாக வாரணாசியின் நிலப்பரப்பை மேலும் மாற்றியமைத்து நகரம் மற்றும் அப்பகுதியைச்சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இந்த திசையின் மற்றொரு நடவடிக்கையாக சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ரூ.1780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

வாரணாசி கண்டோன்மென்ட்  நிலையம் முதல் கோடோவ்லியா  நிலையம் வரை பயணிகள் ரோப்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். 645 கோடி ரூபாய் செலவில்  இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இது சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு பயணத்தை எளிதாக்கும்.

தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் செலவில் பகவன்பூரில் 55 கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிக்ரா மைதானத்தில்  2-வது மற்றும் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கழக நிறுவனத்தால் சேவாபுரியில் இசர்வார் கிராமத்தில் எல்பிஜி சேமிப்பு ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். மாற்றியமைக்கப்பட்ட அறைகளுடன் படகுதுறை, பார்தரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

நீர்வள இயக்கத்தின் கீழ் 19 குடிநீர் திட்டங்களை பிரதமர் அர்ப்பணிக்கவுள்ளார். இதன் மூலம் 63 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்.  ஊரக குடிநீர் திட்டத்தை மேலும் வலுப்படுத்த 59 குடிநீர் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு, கார்கியானில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தரம் பிரித்தல், வரிசைப்படுத்துதல், பதப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இது வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.

வாரணாசி பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ராஜ்காட் மற்றும் மஹ்மூர்கஞ்ச் அரசுப் பள்ளிகளின் மறு சீரமைப்பு பணிகள் உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் அர்ப்பணிப்பார்; உள் நகர சாலைகளை அழகுபடுத்துதல்; நகரின் 6 பூங்காக்கள் மற்றும் குளங்களை மறுவடிவமைப்பு செய்தல்.

லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ஏடிசி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார்; பேலுபூர் நீர் பணி வளாகத்தில் 2 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலை,; கோனியா உறிஞ்சி நிலையத்தில் 800 கிலோவாட் சூரிய மின்சக்தி நிலையம்; சாரநாத்தில் புதிய சமூக சுகாதார மையம்; சந்த்பூரில் உள்ள தொழிற்பேட்டையின் உள்கட்டமைப்பு மேம்பாடு; கேதாரேஷ்வர், விஸ்வேஷ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் காண்ட் பரிக்ரமா கோவில்களுக்கு புத்துயிர் அளித்தல்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PM Modi’s Policies Uphold True Spirit Of The Constitution

Media Coverage

How PM Modi’s Policies Uphold True Spirit Of The Constitution
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
CEO of Perplexity AI meets Prime Minister
December 28, 2024

The CEO of Perplexity AI Shri Aravind Srinivas met the Prime Minister, Shri Narendra Modi today.

Responding to a post by Aravind Srinivas on X, Shri Modi said:

“Was great to meet you and discuss AI, its uses and its evolution.

Good to see you doing great work with @perplexity_ai. Wish you all the best for your future endeavors.”