பிரதமர் திரு நரேந்திர மோடி மே 10 அன்று ராஜஸ்தான் செல்லவுள்ளார். காலை 11 மணியளவில் நத்தட்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு பிரதமர் செல்லவுள்ளார். முற்பகல் 11.45 மணியளவில் அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். மாலை 3.15 மணியளவில் அபு சாலையில் உள்ள பிரம்ம குமாரிகளின் சாந்திவன் வளாகத்திற்கு பிரதமர் செல்லவுள்ளார்.
நத்தட்வாராவில் பிரதமர்
ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அர்ப்பணித்து தொடங்கி வைக்கவுள்ளார். இப்பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளது. சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் சரக்கு மற்றும் சேவை நடவடிக்கைகளில் வசதிகளை ஏற்படுத்துவதுடன் வர்த்தகத்திற்கு ஊக்கமளித்து இப்பிராந்தியத்தில் மக்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தும்.
ராஜ்சமந்த், உதய்பூர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மேம்பாட்டிற்காக சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மக்களின் வசதிகளை மேம்படச் செய்யும் வகையில் உதய்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ராஜ்சமந்தில் நத்தட்வாராவில் இருந்து நத்தட்வாரா நகரம் வரை புதிய வழித்தடத்தை அமைப்பதற்காக ரயில்வே திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும், என்எச்-48ன் உதய்பூர் முதல் ஷாம்னாஜி வரை 114 மீட்டர் தொலைவிலான 6 வழிப்பாதை; என்எச் 25-ன் பார்-பிலாரா-ஜோத்பூர் பிரிவுகளின் 110 கி.மீ. தொலைவிற்கு அகலமாக்கப்பட்ட 4 வழிப்பாதை; என்எச் 58இ-ன் 48 கி.மீ. தொலைவிலான இரண்டு வழிப்பாதை ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
பிரம்ம குமாரிகளின் சாந்திவன் வளாகத்தில் பிரதமர்
பிரதமரின் சிறப்புக் கவனம் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கு உத்வேகம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரம்மகுமாரிகளின் சாந்திவன் வளாகத்திற்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு அவர் அறக்கட்டளையின் அதிநவீன சிறப்பு சர்வதேச மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். செவிலியர் கல்லூரியில் விரிவாக்கம், ஷிவ்மணி முதியோர் இல்லத்தில் இரண்டாவது பிரிவு ஆகியவற்றிற்கு அபுசாலையில் அமைந்துள்ள அதிநவீன சிறப்பு அறக்கட்டளை சர்வதேச மருத்துவமனை 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இம்மருத்துவமனை இப்பகுதியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளித்து ஏழை மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படும்.