இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தல், நாட்டுக்கு அர்ப்பணித்தல், அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றின் மூலம் எரிசக்தித் துறைக்குப் பெரும் ஊக்கம் கிடைக்கும்
சாலை, ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறையின் முக்கியத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்
சைலஸ்ரீ அரண்மனை வடிவிலான சம்பல்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
குவஹாத்தியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
காமாக்யா கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரத்திலான வசதிகளை வழங்குவதற்காக காமாக்யா திவ்ய பரியோஜனா திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
விளையாட்டு மேம்பாடு, மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களுக்கு குவஹாத்தியில் முக்கிய கவனம் செலுத்தப்படும்
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 3-4 தேதிகளில் ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 3-4 தேதிகளில் ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 3 அன்று பிற்பகல் 2.15 மணியளவில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ.68,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின்னர் பிரதமர் அசாம் செல்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 11:30 மணியளவில், குவஹாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

சம்பல்பூரில் பிரதமர்

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஒடிசாவின் சம்பல்பூரில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர், திட்டங்களை தொடங்கி வைத்து, தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார். எரிசக்தித் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

திட்டத்தின் 'ஜகதீஷ்பூர் – ஹால்டியா மற்றும் பொக்காரோ – தாம்ரா குழாய்ப்பாதைத் திட்டத்தில் தாம்ரா– அங்குல் குழாய்ப் பிரிவை (412 கிலோமீட்டர்)யும், 'பிரதமரின் கங்கா ஆற்றல்' திட்டத்தின் கீழ் ரூ.2450 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட ஒடிசாவை தேசிய எரிவாயு தொகுப்புடன் இணைக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். மும்பை – நாக்பூர் – ஜார்ஜுகுடா குழாய் திட்டத்தின் 'நாக்பூர் ஜார்ஜுகுடா இயற்கை எரிவாயு குழாய் பிரிவுக்கும் (692 கிலோமீட்டர்) பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.2660 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை மேம்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, சுமார் 28,980 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் என்டிபிசி தர்லிபாலி சூப்பர் அனல் மின் நிலையம் மற்றும் என்எஸ்பிசிஎல் ரூர்கேலா பிபி-II விரிவாக்கத் திட்டம் ஆகியவை அடங்கும். ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் என்டிபிசி தால்ச்சர் அனல் மின் திட்டத்தின் நிலை-3 திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். இந்த மின் திட்டங்கள் ஒடிசா மற்றும் பல மாநிலங்களுக்கு குறைந்த விலை மின்சாரத்தை வழங்கும்.

27,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தாளபிரா அனல் மின் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில், இந்த அதிநவீன திட்டம் நம்பகமான, மலிவான மற்றும் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.

மகாநதி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் நிலக்கரி உள்கட்டமைப்புத் திட்டங்களான புவனேஸ்வரின் (முதல் கட்டம்), அங்குல் மாவட்டத்தில் உள்ள தால்ச்சர் நிலக்கரி வயல்களில் (முதல் கட்டம்) மற்றும் லஜ்குரா விரைவு சரக்கு ஏற்றும் அமைப்பு உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 2145 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் ஒடிசாவிலிருந்து உலர் எரிபொருளின் தரம் மற்றும் விநியோகத்தை மேம்படுத்தும். ஒடிசா மாநிலம் ஜார்ஜுகுடா மாவட்டத்தில் ரூ.550 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள இப் பள்ளத்தாக்கு சலவை நிலையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். நிலக்கரி பதப்படுத்துதலில் தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், புதுமை மற்றும் நிலைத்தன்மையை குறிக்கும் வகையில் இது அமையும். ரூ. 878 கோடி முதலீட்டில் மகாநதி நிலக்கரி நிறுவனம் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஜார்ஜுகுடா – பார்பாலி – சர்டேகா ரயில் பாதை முதல் கட்டத்தின் 50 கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டாவது பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

சுமார் ரூ.2110 கோடி ஒட்டுமொத்த செலவில் மேம்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மூன்று சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். தேசிய நெடுஞ்சாலை எண் 520-ல் ரிமுளி-கொய்டா பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை எண் 23-ல் (புதிய தேசிய நெடுஞ்சாலை எண் 143) பிராமித்ராபூர்-பிராமணி புறவழிச்சாலை பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் (புதிய தேசிய நெடுஞ்சாலை எண் 143) ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டங்கள், சாலைகள் இடையே இணைப்பை மேம்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

மேலும், சுமார் ரூ.2146 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். சைலஸ்ரீ அரண்மனை வடிவிலான சம்பல்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். சம்பல்பூர் – தால்செர் இரட்டை ரயில் பாதை (168 கிலோமீட்டர்) மற்றும் ஜார்தார்பா – சோன்பூர் புதிய ரயில் பாதை (21.7 கிலோமீட்டர்) ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்து இந்தப் பிராந்தியத்தில் ரயில் கட்டமைப்புத் திறனை மேம்படுத்துவார். பூரி-சோனேபூர்-பூரி வாராந்திர விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

சம்பல்பூர் இந்திய மேலாண்மைக் கழகத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், ஜார்ஜுகுடா தலைமை அஞ்சலக பாரம்பரிய கட்டிடத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமரின் குவஹாத்தி சுற்றுப் பயணம்

குவஹாத்தியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் பிரதமர், புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் முயற்சியின் மற்றொரு படியாக, மா காமாக்ய திவ்யா பரியோஜனா திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்படுகிறது.  

தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு வழித்தட இணைப்பின் ஒரு பகுதியாக 38 பாலங்கள் உட்பட 43 சாலைகள் மேம்படுத்தப்படும் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். டோலாபாரி முதல் ஜமுகுரி வரையிலும், பிஸ்வநாத் சாரியாலி முதல் கோஹ்பூரிலும் இரண்டு நான்கு வழிப்பாதை திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் இட்டா நகருக்கான இணைப்பை மேம்படுத்தவும், இப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.

இந்தப் பிராந்தியத்தின் அபரிமிதமான விளையாட்டுத் திறனைப் பயன்படுத்தும் நோக்கில், மாநிலத்தில் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். சந்திரபூரில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் நேரு விளையாட்டரங்கத்தை ஃபிஃபா தரத்திலான கால்பந்து மைதானமாக மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், கரீம்கஞ்சில் மருத்துவக் கல்லூரி வளர்ச்சி திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
25% of India under forest & tree cover: Government report

Media Coverage

25% of India under forest & tree cover: Government report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi