PM to launch various initiatives related to the agricultural and animal husbandry sector worth around Rs 23,300 crore in Washim
Celebrating the rich heritage of the Banjara community, PM to inaugurate Banjara Virasat Museum
PM to inaugurate and lay foundation stone of various projects worth over Rs 32,800 crore in Thane
Key focus of the projects: Boosting urban mobility in the region
PM to inaugurate Aarey JVLR to BKC section of Mumbai Metro Line 3 Phase – 1
PM to lay foundation stones of Thane Integral Ring Metro Rail Project and Elevated Eastern Freeway Extension
PM to lay foundation stone of Navi Mumbai Airport Influence Notified Area (NAINA) project

பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 5 அன்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:15 மணியளவில் போஹாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்கிறார். வாஷிமில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பிறகு, காலை 11.30 மணியளவில், பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை போற்றும் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில், சுமார் ரூ .23,300 கோடி மதிப்புள்ள விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல முயற்சிகளை அவர் தொடங்கிவைக்கிறார். மாலை 4 மணியளவில், தானேவில் ரூ .32,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், பி.கே.சி மெட்ரோ நிலையத்திலிருந்து, மும்பையின் ஆரே ஜே.வி.எல்.ஆர் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். பி.கே.சி மற்றும் சாண்டாக்ரூஸ் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோவில் அவர் பயணம் செய்கிறார்.

 

வாஷிமில் பிரதமர்

 

விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, சுமார் 9.4 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 20,000 கோடி மதிப்புள்ள பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் 18-வது தவணையை பிரதமர் வழங்குவார். 18 வது தவணை விடுவிக்கப்படுவதன் மூலம், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி சுமார் ரூ .3.45 லட்சம் கோடியாக இருக்கும். மேலும், சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் நமோ ஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5வது தவணையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முக்கிய திட்டங்களில், தனிப்பயன் வாடகை மையங்கள், முதன்மை செயலாக்க அலகுகள், கிடங்குகள், வரிசையாக்கம் மற்றும் தரம் பிரித்தல் அலகுகள், குளிர் பதன சேமிப்பு திட்டங்கள், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

 

மொத்தம் ரூ.1,300 கோடி விற்றுமுதல் கொண்ட 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

 

மேலும், கால்நடைகள் மற்றும் உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பத்திற்கான ஒருங்கிணைந்த மரபணு சிப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த முயற்சி, விவசாயிகளுக்கு மலிவு விலையில் பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து கிடைப்பதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஒரு டோஸுக்கு சுமார் ரூ. 200 செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜீனோமிக் சிப், உள்நாட்டு கால்நடைகளுக்கான GAUCHIP மற்றும் எருமைகளுக்கான MAHISHCHIP ஆகியவை, மரபணு தட்டச்சு சேவைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மரபணு தேர்வை செயல்படுத்துவதன் மூலம், இளம் உயர்தர காளைகளை இளம் வயதிலேயே அடையாளம் காண முடியும்.

 

மேலும், முதலமைச்சரின் சவுர் க்ருஷி வாஹினி யோஜனா – 2.0 திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய சக்தி மின் உற்பத்தி பூங்காக்களை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, முதலமைச்சரின் எனது பெண் சகோதரி திட்டப் பயனாளிகளையும் அவர் கௌரவிப்பார்.

 

தானேவில் பிரதமர்

 

இந்தப் பிராந்தியத்தில் நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய மெட்ரோ மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ.14,120 கோடி மதிப்பிலான மும்பை மெட்ரோ ரயில் பாதை - 3-ன் பி.கே.சி முதல் ஆரே வரையிலான ஜே.வி.எல்.ஆர் பிரிவை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த பிரிவில், 10 நிலையங்கள் இருக்கும், அவற்றில் 9 நிலத்தடியில் இருக்கும். மும்பை மெட்ரோ லைன் - 3 என்பது, ஒரு முக்கிய பொது போக்குவரத்து திட்டமாகும், இது மும்பை நகரத்திற்கும் புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையிலான பயணத்தை மேம்படுத்தும். முழுமையாக செயல்படும் லைன் -3 தினசரி சுமார் 12 லட்சம் பயணிகளுக்கு சேவை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சுமார் ரூ.12,200 கோடி செலவில் கட்டப்படவுள்ள தானே ஒருங்கிணைந்த வளைய மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். திட்டத்தின் மொத்த நீளம் 29 கிமீ ஆகும், இதில் 20 உயர்த்தப்பட்ட மற்றும் 2 நிலத்தடி நிலையங்கள் உள்ளன. இந்த லட்சிய உள்கட்டமைப்பு திட்டம் மகாராஷ்டிராவின் முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையமான தானேவின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும்.

 

சேடா நகர் முதல் தானே, ஆனந்த் நகர் வரையிலான மேம்பால கிழக்கு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டம் தெற்கு மும்பையிலிருந்து தானே வரை தடையற்ற இணைப்பை வழங்கும்.

 

மேலும், சுமார் ரூ.2,550 கோடி மதிப்பிலான நவி மும்பை விமான நிலைய செல்வாக்கு அறிவிக்கப்பட்ட பகுதி (நைனா) திட்டத்தின் முதல் கட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இத்திட்டத்தில், முக்கிய பிரதான சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அடங்கும்.

 

சுமார் ரூ.700 கோடி செலவில் கட்டப்படவுள்ள தானே மாநகராட்சிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தானே மாநகராட்சியின் நிர்வாக கட்டிடம், பெரும்பாலான நகராட்சி அலுவலகங்களை மையமாக அமைந்துள்ள கட்டிடத்தில் இடமளிப்பதன் மூலம் தானே குடிமக்களுக்கு நன்மைகளை வழங்கும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi