Quoteஜல்கானில் நடைபெறும் லட்சாதிபதி சகோதரி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
Quote11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு பிரதமர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார்
Quoteரூ.2,500 கோடி சுழல் நிதியை விடுவிப்பதுடன் , ரூ.5,000 கோடி வங்கிக் கடன்களை வழங்குகிறார் பிரதமர்
Quoteஜோத்பூரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 25 அன்று மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கானுக்கும், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கும் பயணம் மேற்கொள்கிறார். காலை 11.15 மணியளவில் நடைபெறும் லட்சாதிபதி சகோதரி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். மாலை 4:30 மணியளவில், ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மகாராஷ்டிராவில் பிரதமர்

லட்சாதிபதி சகோதரி  மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஜல்கானுக்கு பிரதமர் வருகை தருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அண்மையில் லட்சாதிபதியாக மாறிய 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி கவுரவிப்பார். நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.

 

4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழல் நிதியை பிரதமர் விடுவிப்பார். 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25.8 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.5,000 கோடி வங்கிக் கடனையும் அவர் வழங்குவார்.

லட்சாதிபதி சகோதரி  திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி லட்சம் சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தானில் பிரதமர்

ஜோத்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்..

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 9, 2025
March 09, 2025

Appreciation for PM Modi’s Efforts Ensuring More Opportunities for All