Quoteரூ.25,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்துள்ள திட்டங்களை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார்
Quoteபெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-ம் முனையத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் ; சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்
Quoteபெங்களூருவில் நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைக்க உள்ளார்
Quoteவிசாகப்பட்டினத்தில் ஓ.என்.ஜி.சி.யின் ஆழ்கடல் நீர்த் திட்டத்தை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார்; கெய்ல் நிறுவனத்தின் ஸ்ரீகாகுளம் அங்குல் இயற்கை எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்
Quoteவிசாகப்பட்டினத்தில் 6 வழி ரெய்ப்பூர் – விசாகப்பட்டின பசுமைப் பொருளாதார வழித்தடத்தின் ஆந்திரப்பிரதேச பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
Quoteவிசாகப்பட்டின ரயில் நிலையத்தின் மறு மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் அடிக்கல் நாட்ட உள்ளார்
Quoteராமகுண்டமில் உரத்தொழிற்சாலையை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார்- கடந்த 2020-ஆம் ஆண்டு பிரதமரால் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் நவம்பர் 11,  12, நவம்பர் 2022-ல்  பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 11ம் தேதி காலை 9.45 மணி அளவில் பெங்களூரு சட்டப்பேரவையில்  நிறுவப்பட்டுள்ள துறவியும், கவிஞருமான கனகதாஸ் மற்றம் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். காலை 10.20 மணி அளவில் பெங்களூரு கே எஸ் ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும்  பாரத் கவ்ரவ் கஷி தர்ஷன் ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்துத் துவக்கி வைக்க உள்ளார்.  பகல் 11.30 மணி அளவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு நண்பகல் 12 மணி அளவில், நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைக்க உள்ளார்.  அதைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் பெங்களூருவில் நடைபெற உள்ள பொது நிகழ்ச்சியில்  பங்கேற்க உள்ளார். மாலை 3.30 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

நவம்பர் 12-ம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.  மாலை 3.30 மணி அளவில் தெலங்கானா ராமகுண்டத்தில் உள்ள ஆர்எஃப்சிஎல் ஆலைக்கு பிரதமர் செல்லவுள்ளார். அதன் பின்னர் 4.15 மணி அளவில் ராமகுண்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

கர்நாடகா, பெங்களூருவில் பிரதமர்

பெங்களூரு கெம்பபேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-ம் முனையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். ஆண்டுக்கு தற்போது 2.5 கோடி பயணிகள் கையாளப்படும் நிலையில், இந்தப் புதிய முனையம் மூலம், 5 முதல் 6 கோடி பயணிகள் வரை கையாள முடியும்.

தோட்டநகரம் என்றழைக்கப்படும் பெங்களூருவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோட்டத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் உணர்வார்கள். பசுமை சுவர்கள், தொங்கு தோட்டங்கள் மற்றும் வெளிப்புறத் தோட்டங்கள் என 10,000 சதுர மீட்டருக்கும் மேலான பரப்பளவைப் பயணிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். இந்த விமான நிலையத்தில் ஏற்கனவே 100 சதவீத அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட நீடித்த கொள்கைகளுடன் 2-வது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. நீடித்த செயல்பாட்டு முயற்சிகளின் அடிப்படையில், 2-வது முனையம் உலகின் மிகப்பெரிய முனையமாக இருக்கும். அமெரிக்க ஜி.பி.சி (பசுமை கட்டிடக் குழு) தனது செயல்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக, சான்றளிக்கப்பட்ட பிளாட்டினம் மதிப்பீடாக இந்த முனையம் இருக்கும். 2-வது முனையத்திற்கான அனைத்து கலை வேலைபாடுகளையும் “நௌரசா” என்ற கருப்பொருள் ஒன்றிணைக்கிறது. கர்நாடகாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் இந்த வேலைபாடுகள் இந்தியர்களின் நெறிகளையும் பிரதிபலிக்கிறது.

4 வழிகாட்டு நெறிமுறைகளுடன் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தோட்டம், நீடித்த, தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரத்தின் முனையம் என்பவை அவை. இந்த அனைத்து அம்சங்களும் 2-வது முனையத்தை இயற்கையில் ஆழமாக பதியச் செய்து அனைத்து பயணிகளுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றன.

பெங்களூரு, க்ரந்திவீரா சங்கோலி ராயன்னா (கேஎஸ்ஆர்) ரயில் நிலையத்தில் சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்துத் தொடக்கிவைக்க உள்ளார். இது நாட்டின் 5-வது மற்றும் தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். பிரபல சுற்றுலா நகரமான மைசூரு மற்றும் பெங்களூரு தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் சென்னையின் தொழில் கேந்திரத்தின் இடையே போக்குவரத்தை  இது மேம்படுத்தும்.

பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திலிருந்து பாரத் கவ்ரவ் காசியாத்திரா ரயில் போக்குவரத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். கர்நாடகாவிலிருந்து காசிக்கு யாத்ரீகர்களை அனுப்ப ரயில்வேத் துறையின் கர்நாடக அரசும் இணைந்து பாரத் கவ்ரவ் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் முதலாவது ரயில் இதுவாகும். காசி, அயோத்தி  மற்றும் பிரக்யாராஜூக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வசதியான தங்குமிடம் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும்.

பெங்களூருவில் நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைக்க உள்ளார்.  பெங்களூரு நகர நிறுவனரும், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவருமான  நடபிரபு கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவு கூரும் விதமாக இது கட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலையை வடிவமைத்த ராம் வி சதர்    98 டன் வெண்கலம் மற்றும் 120 டன் எஃகு ஆகியவற்றுடன் இதனை உருவாக்கியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் பிரதமர்

ரூ.10,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவுற்ற திட்டங்களை பிரதமர் அரப்பணிக்க உள்ளார். 6 வழி பசுமை ரெய்ப்பூர் – விசாகப்பட்டின பொருளாதார வழித்தடத்தின்  ஆந்திரப்பிரதேச பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

விசாகப்பட்டினத்தில் ரெய்ப்பூர் – விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடத்தில் 6 வழிப் பசுமை சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். ரூ.3,750 கோடி செலவில் இது அமைக்கப்பட உள்ளது. சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா தொழிற்சாலைகளிலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் இடையேயும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இடையேயும் பொருளாதார முனையம் விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். அத்துடன் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பழங்குடியினம் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தினர் பகுதிகளுக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் விசாகப்பட்டினத்தில் கான்வென்ட் சந்திப்பிலிருந்து ஷீலா நகர் சந்திப்பு வரை துறைமுகச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் உள்ளூர் மற்றும் துறைமுக சரக்குப் போக்குவரத்தால் விசாகப்பட்டின நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும். ஸ்ரீகாகுளம் – கஜபதி முனையத்தின் ஒரு பகுதியாக ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நரசன்னபேட்டா முதல் பதப்பட்டினம் வரையிலான என்எச்-326-ஏ சாலையை அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இத்திட்டம் அப்பிராந்தியத்தில் சிறந்த போக்குவரத்தை உருவாக்கும்.

ரூ.2,900 கோடி செலவில், அமைக்கப்பட்டுள்ள ஆந்திரப்பிரதேசத்தின் ஓஎன்ஜிசி-யின் ஆழ்கடல் நீர்த்திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இது நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் அளவிற்கு எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறனுடைய ஆழமான எரிவாயு கண்டறிதல் திட்டமாகும். 6.65 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட்ர்டு கியூபிக் மீட்டர் திறனுடன் கூடிய கெய்ல் நிறுவனத்தின் ஸ்ரீகாகுளம் அங்குல் இயற்கை எரிவாயுக் குழாய் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். ரூ.2,650 கோடி செலவில் 745 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் பதிக்கப்பட உள்ளது. இயற்கை எரிவாயு கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்ய இந்தக் குழாய் திட்டம் சிறந்த கட்டமைப்பை உருவாக்கும். ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களின் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்புக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும். ரூ.450 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ள விசாகப்பட்டினம் ரயில்வே நிலைய திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 75,000 பயணிகளைக் கையாள முடியும்.  பயணிகளுக்கான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். ரூ.150 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீன்பிடி  துறைமுகத்தை மேம்படுத்தி நவீனமயமாக்குவதன் மூலம், நாள் ஒன்றுக்கு 150 டன் முதல் 300 டன் வரையிலான கையாளும் திறனை இரு மடங்காக்கி, பாதுகாப்பான முறையில் மீன்களை தரையிறக்க முடியும் மற்றும் பிற நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, படகுத்துறையில் நேரம் வீணாவதைக் குறைக்கவும், விலை நிர்ணயத்தை மேம்படுத்தவும் உதவும்.

தெலங்கானா ராமகுண்டத்தில் பிரதமர்

ராமகுண்டத்தில் ரூ.9,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை பிரதமர்  தொடங்கிவைக்க உள்ளார். ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ராமகுண்ட திட்டத்திற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. யூரியா உற்பத்தியில் தற்சார்பை அடைய வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடுத்து உரத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே வேப்பிலையுடன் கலக்கப்பட்ட யூரியா ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு ராமகுண்டம் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் ஆதரவுடன் தேசிய உர நிறுவனம், பொறியியல் இந்தியா நிறுவனம், இந்திய உரக்கழக நிறுவனம் ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் இந்தத் திட்டம் அமைக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய ஆலை மூலம் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம். கர்நாடகா, சத்தீஷ்கர் மற்றும்  மகராஷ்ட்ர மாநில விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் உரங்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்யப்படும். போதுமான உரம் கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதோடு மட்டுமில்லாமல் சாலை, ரயில்வே, துணை சார்ந்த தொழிற்சாலை போன்ற கட்டமைப்பு வளர்ச்சி உட்பட இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கப்படும். அத்துடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனத்தினர் தங்களது பல்வேறு பொருட்களை தொழிற்சாலைக்கு அனுப்ப முடியும். ஆர்எஃப்சிஎல் நிறுவனத்தின் ‘பாரத் யூரியா’ இறக்குமதியை குறைப்பதன் மூலம் பொருளாதாரத்திற்கு சிறந்த ஊக்கம் அளிப்பதோடு, உள்ளூர் விவசாயிகளுக்கு உரியநேரத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு சேவைகளும் விரிவுப்படுத்தப்படும். 

ரூ.1,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பத்ராசலம் சாலை – சட்டுப்பள்ளி ரயில்வே இணைப்புப் பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். தேசிய நெடுஞ்சாலை-765DG-யின் மேடக்-எல்கத்தூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை எண்.161பிபி-யின் போதான்-பாசார்-பைன்சா பிரிவு, தேசிய நெடுஞ்சாலை-353சி-யின் சிரோன்ச்சாவிலிருந்து மகாதேவ்பூர் பிரிவு வரையிலான ரூ.2,200 கோடி மதிப்பிலான சாலைத் திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தமிழ்நாடு காந்திகிராமில் பிரதமர்

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார். 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டைச் சேர்ந்த 2,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பட்டங்களை பெற உள்ளனர்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India eyes potential to become a hub for submarine cables, global backbone

Media Coverage

India eyes potential to become a hub for submarine cables, global backbone
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Indian cricket team on winning ICC Champions Trophy
March 09, 2025

The Prime Minister, Shri Narendra Modi today congratulated Indian cricket team for victory in the ICC Champions Trophy.

Prime Minister posted on X :

"An exceptional game and an exceptional result!

Proud of our cricket team for bringing home the ICC Champions Trophy. They’ve played wonderfully through the tournament. Congratulations to our team for the splendid all around display."