PM to visit Ujjain and dedicate Shri Mahakal Lok on 11th October
PM to dedicate and lay foundation stone of projects worth over Rs 14,500 crore in Gujarat
PM to declare Modhera as India’s first 24x7 solar powered village; dedication and foundation stone of multiple projects worth more than Rs. 3900 crore to be done in Mehsana
PM to perform Darshan and Pooja at Modheshwari Mata Temple and visit Sun Temple in Mehsana
PM to dedicate and lay the foundation stone of projects worth over Rs. 8000 crore in Bharuch, with focus on chemical and pharmaceutical sector
PM to dedicate and lay the foundation stones of healthcare facilities worth around Rs. 1275 crore in Ahmedabad; to also inaugurate Phase 1 of Modi Shaikshanik Sankul
Dedication and foundation stone of projects related to irrigation, power, water supply and urban infrastructure worth around Rs.1450 crore to be done in Jamnagar

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து அவர் அக்டோபர் 11 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறார்.

பிரதமர் அக்டோபர் 9 ஆம் தேதி, மாலை சுமார் 5:30 மணியளவில், மெஹ்சானாவில் உள்ள மோதேராவில் பல திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் பிரதமர் மாலை 6:45 மணிக்கு மோதேஸ்வரி மாதா கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார்.  அதைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு சூர்யா மந்திருக்கு செல்கிறார்.

பிரதமர் அக்டோபர் 10 ஆம் தேதி, காலை 11 மணியளவில், பருச்சில் உள்ள அமோத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

பிற்பகல் 3:15 மணியளவில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி ஷைக்ஷனிக் சங்குலைத் திறந்து வைக்கிறார்.

அதன்பின், மாலை 5:30 மணிக்கு, ஜாம்நகரில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

அக்டோபர் 11 ஆம் தேதி, பிற்பகல் 2:15 மணிக்கு, அகமதாபாத்தின் அசர்வாவில் உள்ள பொது மருத்துவமனையில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அதன் பிறகு மாலை சுமார் 5 மணிக்கு அவர் உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ மஹாகல் லோக் (பிரதான சாலை) திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து இரவு 7:15 மணிக்கு உஜ்ஜயினியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மெஹ்சானாவின் மோதேராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், ரூ 3,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார். 

இந்தியாவின் முதல் 24x7 சூரிய சக்தியில் இயங்கும் கிராமமாக மோதேரா கிராமத்தை பிரதமர் அறிவிக்கிறார்.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் ஏழை, எளிய மக்களுக்கு எவ்விதம் பயன்பட்டு, அவர்களை மேன்மை அடையச் செய்யும் என்பதை இந்தத் திட்டம் நிரூபிக்கும்.

ஜாம்நகரில் ரூ 1,450 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி,  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த திட்டங்கள் நீர்ப்பாசனம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பானவையாகும்.

உஜ்ஜயினியில் பிரதமர்  ஸ்ரீ மஹாகல் லோக்கை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த பிரதான சாலை திட்டத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் அனுபவத்தை வளப்படுத்த உதவும். இத்திட்டம் நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi visits the Indian Arrival Monument
November 21, 2024

Prime Minister visited the Indian Arrival monument at Monument Gardens in Georgetown today. He was accompanied by PM of Guyana Brig (Retd) Mark Phillips. An ensemble of Tassa Drums welcomed Prime Minister as he paid floral tribute at the Arrival Monument. Paying homage at the monument, Prime Minister recalled the struggle and sacrifices of Indian diaspora and their pivotal contribution to preserving and promoting Indian culture and tradition in Guyana. He planted a Bel Patra sapling at the monument.

The monument is a replica of the first ship which arrived in Guyana in 1838 bringing indentured migrants from India. It was gifted by India to the people of Guyana in 1991.