PM to inaugurate Smriti Van Memorial in Bhuj - a one of its kind initiative to celebrate the spirit of resilience of people shown after the devastating 2001 earthquake
State of the art Smriti Van Earthquake Museum is segregated in seven blocks on seven themes: Rebirth, Rediscover, Restore, Rebuild, Rethink, Relive and Renew
PM to inaugurate and lay foundation stone of projects worth around Rs 4400 crore in Bhuj
PM to inaugurate Kachchh Branch Canal of Sardar Sarovar Project which will boost water supply in the region
In a one of its kind event, PM to participate in Khadi Utsav being organised to pay tribute to khadi and its importance during the freedom struggle
Unique feature: 7500 women khadi artisans spinning charkha live at the same time and at the same place
PM to address programme marking commemoration of 40 years of Suzuki in India and lay foundation stone of two key projects of Suzuki group in India

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 27-28 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 27 அன்று பிற்பகல் 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். ஆகஸ்ட் 28 அன்று காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் பின்னர் நண்பகல் 12 மணி அளவில் புஜ் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பார்.   பிற்பகல் 5 மணி அளவில் இந்தியாவில் சுசூகியின்  40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், காந்தி நகரில் நடைபெறும் விழாவில், பிரதமர் உரையாற்றுவார்.

காதி விழா

சுதந்திரத்தின் 75வது ஆண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் காதி விழா,  விடுதலைப் போராட்ட காலத்தில் காதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற உள்ள  இந்த விழாவில், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் அதிகமான பெண் காதி கைவினை கலைஞர்கள், பங்கேற்று ராட்டையில் நூல் நூற்பார்கள். மேலும், 1920-க்குப் பின் பல்வேறு தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட 22 ராட்டைகளின் கண்காட்சியும், நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது, குஜராத் அரசின் கிராமோத்யோக் வாரியத்திற்கான புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் பிரதமர், சபர்மதியில் நடை மேம்பாலத்தையும் திறந்து வைப்பார்.

புஜ் பகுதியில் பிரதமர்

புஜ் மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். புஜ் பகுதியில் மையம் கொண்ட 2021 நிலநடுக்கத்தின் போது சுமார் 13,000 பேரின் வாழ்க்கை பறிக்கப்பட்ட பின் மக்கள் உறுதி உணர்வை வெளிப்படுத்தியதை பெருமைப்படுத்தும் விதமாக 470 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த  நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் இந்த நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். ஸ்மிருதி வன நிலநடுக்க அருங்காட்சியகம் 7 கருப்பொருட்கள் அடிப்டையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

புஜ் பகுதியில் ரூ.4,400 கோடி  மதிப்புள்ள  திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பல திட்டங்களை தொடங்கிவைப்பார். புஜ்-பீமாசார் சாலை உட்பட ரூ.1,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

காந்திநகரில் பிரதமர்

இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது ரூ.7,300 கோடி முதலீட்டில்  ஹன்சால்பூரில் அமையவிருக்கும் மின்சார வாகன மின்கலம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதே போல் ரூ.11,000 கோடி முதலீட்டுடன் ஹரியானாவின் ஹர்கோடாவில் பயணிகள் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi visits the Indian Arrival Monument
November 21, 2024

Prime Minister visited the Indian Arrival monument at Monument Gardens in Georgetown today. He was accompanied by PM of Guyana Brig (Retd) Mark Phillips. An ensemble of Tassa Drums welcomed Prime Minister as he paid floral tribute at the Arrival Monument. Paying homage at the monument, Prime Minister recalled the struggle and sacrifices of Indian diaspora and their pivotal contribution to preserving and promoting Indian culture and tradition in Guyana. He planted a Bel Patra sapling at the monument.

The monument is a replica of the first ship which arrived in Guyana in 1838 bringing indentured migrants from India. It was gifted by India to the people of Guyana in 1991.