PM to inaugurate dedicate to nation and lay the foundation stone of multiple development projects worth more than Rs. 52,250 crore
Projects encompasses important sectors like health, road, rail, energy, petroleum & natural gas, tourism among others
PM to dedicate Sudarshan Setu connecting Okha mainland and Beyt Dwarka
It is India’s longest cable stayed bridge
PM to dedicate five AIIMS at Rajkot, Bathinda, Raebareli, Kalyani and Mangalagiri
PM to lay the foundation stone and dedicate to the nation more than 200 Health Care Infrastructure Projects
PM to inaugurate and dedicate to the nation 21 projects of ESIC
PM to lay foundation stone of the New Mundra-Panipat pipeline project

2024 பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார். பிப்ரவரி 25 அன்று, காலை 7:45 மணியளவில், பிரதமர் பேட் துவாரகா கோயிலில் பூஜையில் பங்கேற்பதுடன் சாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து காலை 8:25 மணியளவில் சுதர்சன் சேது திட்டத்தை பார்வையிடுகிறார்.. பின்னர் காலை 9.30 மணியளவில் துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்கிறார்.

பிற்பகல் 1 மணியளவில், துவாரகாவில் ரூ.4150 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர், ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்கிறார்.  மாலை 4.30 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ரூ.48,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.

துவாரகாவில் பிரதமர்

துவாரகாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும்.

சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பாலம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, துவாரகா மற்றும் பேட்-துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாகக் குறைக்கும். பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, யாத்ரீகர்கள் பேட் துவாரகாவை அடைய படகு போக்குவரத்தை நம்ப வேண்டியிருந்தது. இந்த பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.

வாடினாரில் தற்போதுள்ள கடலோர பாதைகளை மாற்றுதல், தற்போதுள்ள பிரதான அல்லது கிளைக் குழாய்க்கு இடையேயான இணைப்பை கைவிடுதல் மற்றும் முழு அமைப்பையும் அருகிலுள்ள புதிய இடத்தில் மாற்றுவது ஆகியவற்றை உள்ளடக்கிய  குழாய் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ராஜ்கோட் – ஓகா, ராஜ்கோட் – ஜெதல்சார் – சோம்நாத் மற்றும் ஜெதல்சார் – வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 927-ன் தோராஜி – ஜம்கந்தோர்னா – காலவாட் பிரிவை அகலப்படுத்தும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஜாம்நகரில் மண்டல அறிவியல் மையம்; ஜாம்நகர் சிக்கா அனல்மின் நிலையத்தில் வெளியேறும் உமிழ்வுகளிலிருந்து கந்தகக் கலவைகளை அகற்றும் செயல்முறை அமைப்பை நிறுவும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ராஜ்கோட்டில் பிரதமர்

ராஜ்கோட்டில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், சுகாதாரம், சாலை, ரயில்வே, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கிய ரூ.48,100 கோடிக்கும்  அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.

நாட்டில் மூன்றாம் நிலை சுகாதார சேவையை வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத் மாநிலம் ராஜ்கோட், பஞ்சாப் மாநிலம் பதிண்டா, ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களை (எய்ம்ஸ்) நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள முதுகலை மருத்துவம் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) 300 படுக்கைகள் கொண்ட செயற்கைக்கோள் மையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். புதுச்சேரி ஏனாமில் ஜிப்மரின் 90 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு ஆலோசனை பிரிவை அவர் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் சென்னையில் தேசிய முதியோர் மையம்;   திருவள்ளூரில் உள்ள  புதிய கூட்டு காசநோய் ஆராய்ச்சி வசதி ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் 100 படுக்கைகள் கொண்ட முதுகலை மருத்துவக் கல்வித் துறையின் 100 படுக்கைகள் கொண்ட செயற்கைக்கோள் மையம், பீகார் மாநிலம் பூர்னியாவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி; ஐசிஎம்ஆரின் 2 களப் பிரிவுகளான கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் கேரளா பிரிவு மற்றும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி) உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடம்; இம்பாலில் உள்ள ரிம்ஸில் கிரிட்டிகல் கேர் பிளாக்; ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மா மற்றும் தும்காவில் உள்ள செவிலியர் கல்லூரிகள் உள்ளிட்டவற்றுடன், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஆகியவற்றின் கீழ், 115 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார் மற்றும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் 78 திட்டங்கள் (50 தீவிர பராமரிப்பு தொகுதிகள், 15 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், 13 தொகுதி பொது சுகாதார பிரிவுகள்);   தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் சமுதாய சுகாதார மையம், ஆரம்ப சுகாதார மையம், மாதிரி மருத்துவமனை, தற்காலிக விடுதி போன்ற பல்வேறு திட்டங்களின் 30 அலகுகள் ஆகியவையும் அடங்கும்.

புனேயில் 'நிசர்க் கிராமம்' என்ற தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது இயற்கை மருத்துவக் கல்லூரியையும், 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும், பல்துறை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தையும் உள்ளடக்கியது. மேலும், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதில் உயர்மட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி வசதிகள் இருக்கும்

இந்த நிகழ்ச்சியின் போது, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின்  ரூ.2280 கோடி மதிப்பிலான 21 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பாட்னா (பீகார்) மற்றும் அல்வார் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் உள்ள 2 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் , கோர்பா (சத்தீஸ்கர்), உதய்பூர் (ராஜஸ்தான்), ஆதித்யாபூர் (ஜார்க்கண்ட்), புல்வாரி ஷெரீப் (பீகார்), திருப்பூர் (தமிழ்நாடு), காக்கிநாடா (ஆந்திரா) மற்றும் சத்தீஸ்கரில் ராய்கர் & பிலாய் ஆகிய இடங்களில் உள்ள 8 மருத்துவமனைகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

 ராஜஸ்தானில் நீம்ரானா, அபு சாலை மற்றும் பில்வாரா ஆகிய இடங்களில் 3 மருந்தகங்கள். ராஜஸ்தானில் அல்வார், பெஹ்ரோர் மற்றும் சீதாபுரா, உத்தராகண்ட் மாநிலம் செலாக்கி, உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், கேரளாவில் கொரட்டி & நவைக்குளம், ஆந்திரப் பிரதேசத்தில் பிடிபிமாவரம் ஆகிய 8 இடங்களில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக மருந்தகங்கள் தொடங்கப்படும் .

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 300 மெகாவாட் புஜ்-2 சூரிய மின்சக்தி திட்டம் உட்பட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். கிரிட் இணைக்கப்பட்ட 600 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம்; காவ்டா சூரிய மின்சக்தி திட்டம்; 200 மெகாவாட் தயாப்பூர்-2 காற்றாலை மின் திட்டம்.

ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய முந்த்ரா-பானிபட் குழாய் பதிக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் கடற்கரையில் உள்ள முந்த்ராவிலிருந்து ஹரியானாவின் பானிபட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்காக ஆண்டுக்கு 8.4 எம்எம்பிஏ நிறுவப்பட்ட திறன் கொண்ட 1194 கி.மீ நீளமுள்ள முந்த்ரா-பானிபட் இடையே குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

சாலை மற்றும் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை தொடங்கி  வைக்கும் பிரதமர், சுரேந்திரநகர் – ராஜ்கோட் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்; பழைய தேசிய நெடுஞ்சாலை 8இ-யில் பாவ்நகர் – தலாஜா (தொகுப்பு-1) நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 751-ன் பிப்லி-பாவ்நகர் (தொகுப்பு-I) தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் சந்தல்பூர் பிரிவில் சமகியாலி முதல் ஆறு வழிப்பாதையை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Biz Activity Surges To 3-month High In Nov: Report

Media Coverage

India’s Biz Activity Surges To 3-month High In Nov: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 24, 2024
November 24, 2024

‘Mann Ki Baat’ – PM Modi Connects with the Nation

Driving Growth: PM Modi's Policies Foster Economic Prosperity