Quoteகுஜராத்தில் ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
Quoteஇந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் விதமாக பாதுகாப்புத்துறை 2022 கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
Quoteமுதன்முறையாக இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன
Quoteடெப்ஃஸ்பேஸ்-ஐ தொடங்கி வைப்பதுடன், தீசா விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி, உள்நாட்டு பயிற்சி விமானம் எச்டிடி40-ஐ வெளியிடுகிறார்
Quoteகேவாடியாவில் மிஷன் லைஃப் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Quoteகேவாடியாவில் மிஷன் லைஃப் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Quoteஇந்திய நகர்ப்புற வீடுகள் 2022 மாநாட்டை ராஜ்கோட்டில் தொடங்கி வைக்கும் பிரதமர், ரூ.5860 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அர்ப்பணிக்கிறார்
Quoteஜுனாகத்தில் சுமார் ரூ.3580 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும், வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
QuotePM to lay foundation stone of development projects worth around Rs 3580 crore in Junagadh and Rs 1970 crore in Vyara

அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் குஜராத் செல்லும் பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அக்டோபர் 19-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பாதுகாப்பு கண்காட்சி 2022-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். நண்பகல் 12 மணிக்கு அதாலாஜில் மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்சலன்சை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.15 மணியளவில் ஜுனாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாலை 6 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய நகர்ப்புற வீடுகள் மாநாடு 2022-ஐ தொடங்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராஜ்கோட்டில் இரவு 7.20 மணிக்கு, புதுமையாக கட்டுமான நடைமுறைகளின் கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார்.

அக்டோபர் 20-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கேவாடியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை குறித்த கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிற்பகல் 3.45 மணியளவில் வியாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

காந்திநகரில் பிரதமர்

காந்திநகரில் பாதுகாப்புத்துறை 2022 கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 'பெருமைக்கான பாதை' என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறும் இந்த கண்காட்சி, இதுவரை நடைபெற்ற கண்காட்சியில் மிகப்பெரியதாக இருக்கும். முதன்முறையாக இந்த கண்காட்சியில், வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களின் இந்திய துணை நிறுவனங்கள், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பிரிவுகள், இந்திய நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இந்த கண்காட்சி இந்திய பாதுகாப்பு உற்பத்தித் திறனை விரிவுப்படுத்துவதற்கான நோக்கத்தையும், அளவையும் வெளிப்படுத்தும். இந்த கண்காட்சியில் இந்தியா அரங்கும், பத்து மாநில அரங்குகளும் இடம்பெறும். கண்காட்சியில் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்ஸ் நிறுவனத் தயாரிப்பான எச்டிடி-40 பயிற்சி விமானத்தை பிரதமர் வெளியிட உள்ளார். இந்த பயிற்சி விமானம் அதிநவீன வசதிகளுடன் விமானிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, தொழில்துறை மற்றும் புத்தொழில் முனைவோர் விண்வெளியில் பாதுகாப்புப் படையினருக்கான புதுமையான தீர்வுகளை காண்பதற்கான மிஷன் டெப்ஃபேசை தொடங்கி வைப்பார். குஜராத்தில் தீசா விமான நிலையத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

ஜூகானத்தில் பிரதமர்

ஜூகானத்தில் ரூ.3580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் கடலோர நெடுஞ்சாலைகளை மேம்படுத்த அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 13 மாவட்டங்களில் 270 கிலோ மீட்டர் நீள சாலைகள் அமைக்கப்படும்.

ராஜ்கோட்டில் பிரதமர்

ராஜ்கோட்டில் சுமார் ரூ.5860 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்திய நகர்ப்புற வீடுகள் 2022 மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

  • Vincy Sierer October 19, 2022

    Sir, please visit Maharashtra ❤️
  • Akash Gupta BJP October 19, 2022

    Prime Minister Narendra Modi to Visit Gujarat
  • amit kumar October 19, 2022

    पर्यटन स्थल सिद्धेश्वर मंदिर महाराज खुर्जा मंदिर परिसर के अंदर तालाब का पानी बहुत ज्यादा दूषित होना नगर पालिका द्वारा शौचालय का निर्माण कराना मगर उनके अंदर ताला लगा रहना जिससे श्रद्धालुओं को शौचालय की सुविधा से श्रद्धालुओं को वंचित रखना नगर पालिका द्वारा पेड़ पौधे लगाना मगर उनके अंदर पानी की सुविधा का ना होना जिसके कारण पेड़ पौधे मर रहे हैं तालाब के आसपास गंदगी का जमा होना नगर पालिका द्वारा साफ सफाई की सुविधा ना रखना मंदिर परिषद के अंदर तालाब में दूषित पानी होना जिससे मछलियों का मरना कृपया जल्दी से जल्दी मंदिर परिषद को स्वच्छ बनाने की कृपा करें🙏🙏🙏🙏 https://www.amarujala.com/uttar-pradesh/bulandshahr/bulandshahr-news-bulandshahr-news-gbd1844901145
  • Sampath Kumar Kannan October 18, 2022

    #NaMo External Affairs Minister recalls Modiji's efforts for safe evacuation of Indian students from Ukraine. https://youtu.be/O6W_tbUTOYo NaMo, Amitshahji Forever & Jai Hind.
  • Umakant Mishra October 18, 2022

    bharat Mata Ki JAy
  • Sanjay Zala October 18, 2022

    🎊🌹🎉 Remembers In A Best Wishes Of A Over All In A 'More' & More Again In A LIONS Of A 'GUJARAT' & "INDIA" Touch 02 A. 'Roll' _ Models In A 'WORLDWIDE' FAMOUS & POPULARS Alone In A 🎉🌹🎊
  • PRATAP SINGH October 18, 2022

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 भारत माता कि जय। 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
  • Gangadhar Rao Uppalapati October 18, 2022

    Jai Bharat.
  • Veena October 18, 2022

    NAMAN MODI JI NAMAN Vandematram
  • kiritbhai Sagar October 18, 2022

    जय हिंद वंदेमातरम 🚩🇮🇳🙏
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India is taking the nuclear energy leap

Media Coverage

India is taking the nuclear energy leap
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 31, 2025
March 31, 2025

“Mann Ki Baat” – PM Modi Encouraging Citizens to be Environmental Conscious

Appreciation for India’s Connectivity under the Leadership of PM Modi