பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 30 ஆம் தேதி, பிரதமர் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.
அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் கெவாடியாவுக்குச் செல்கிறார். சர்தார் படேல் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறார். பின்னர் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார். ஆரம்ப் 4.0 நிறைவையொட்டி, 97வது பொது அறக்கட்டளைப் பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுவார். அதன்பின், பனஸ்கந்தா மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர், அங்கு தாராட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். அகமதாபாத்தில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நவம்பர் 1 ஆம் தேதி, பிரதமர் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்திற்குச் செல்கிறார், அங்கு அவர் 'மன்கர் தாம் கி கௌரவ் கதா' என்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஜம்புகோடாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.