Quoteஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனைப் பிரதமர் வரவேற்கிறார்
Quoteபுலந்த்ஷரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
Quoteரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன
Quoteபிரதமரின் விரைவுசக்திப் பெருந்திட்டத்தின்படி, கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில் நகரியத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 25 அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:45 மணியளவில், புலந்த்ஷரில் ரூ.19,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரயில்வே, சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்தத் திட்டங்கள்  தொடர்புடையவையாகும்.

மாலை 5.30 மணியளவில் ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்கிறார். ஜந்தர் மந்தர், ஹவா மஹால், ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் இணைந்து பிரதமர் பார்வையிடுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷரில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது, புதிய குர்ஜா – புதிய ரேவாரி இடையேயான 173 கிலோமீட்டர் நீளமுள்ள மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையைப் பிரதமர் காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மேற்கு மற்றும் கிழக்கு சிறப்பு சரக்கு வழித்தடப் பிரிவுகளுக்கு இடையே முக்கியமான இணைப்பை இது ஏற்படுத்துகிறது. உலகிலேயே முதலாவதான இந்த சுரங்கப்பாதை இரட்டை அடுக்குப் பெட்டக ரயில்களைத் தடையின்றி இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சரக்கு வழித்தடத்தில், சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் ரயில்களின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.

மதுரா – பல்வால் பிரிவு மற்றும் சிபியானா புசுர்க் – தாத்ரி பிரிவை இணைக்கும் நான்காவது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தப் புதிய வழித்தடங்கள் தெற்கு மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவுடன் தேசிய தலைநகருக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

பிரதமர் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அலிகார் முதல் பத்வாஸ் வரையிலான நான்கு வழிப்பாதை தொகுப்பு - 1 (தேசிய நெடுஞ்சாலை 34-ல் அலிகார்-கான்பூர் பிரிவின் ஒரு பகுதி), ஷாம்லி வழியாக மீரட் முதல் கர்னால் எல்லையை அகலப்படுத்துதல், தேசிய நெடுஞ்சாலை 709 தொகுப்பு-2ல் ஷாம்லி-முசாபர்நகர் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைத்தல் ஆகிய சாலை திட்டங்கள். ரூ. 5000 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலை திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்தியன் ஆயிலின்  துண்ட்லா – கவாரியா குழாய் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 255 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் குழாய்த் திட்டம் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மதுரா, துண்ட்லா ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகளுடன் கூடிய பரவுனி-கான்பூர் குழாயின் கவாரியா தி-பாயின்ட் வரை பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும், துண்ட்லா, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விநியோக வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உதவும்.

கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில் நகரியத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை இணைத்து செயல்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.1,714 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், 747 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்களின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. தெற்கில் கிழக்கு புறவழி விரைவுச் சாலை மற்றும் கிழக்கில் டெல்லி-ஹவுரா அகல ரயில் பாதை ஆகியவை சந்திக்கின்றன.  நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே (5 கி.மீ), யமுனா எக்ஸ்பிரஸ்வே (10 கி.மீ), டெல்லி விமான நிலையம் (60 கி.மீ), ஜேவர் விமான நிலையம் (40 கி.மீ), அஜய்ப்பூர் ரயில் நிலையம் (0.5 கி.மீ) மற்றும் புதிய தாத்ரி டி.எஃப்.சி.சி நிலையம் (10 கி.மீ) ஆகிய பன்முக இணைப்புக்கான பிற உள்கட்டமைப்புகள் இந்த திட்டத்தின் அருகில் இருப்பதால் இந்த இடம் தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்கிறது. இந்தப் பிராந்தியத்தில் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதில் இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.

இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ.460 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானம் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மதுரா கழிவுநீர் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறதார். இந்தப் பணியில் மசானியில் 30 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், டிரான்ஸ் யமுனாவில் தற்போதுள்ள 30 மில்லியன் லிட்டர் மற்றும் மசானியில் 6.8  மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 20  மில்லியன் லிட்டர் டி.டி.ஆர்.ஓ ஆலை (மூன்றாம் நிலை சுத்திகரிப்பு மற்றும் எதிர் சவ்வூடு பரவல் ஆலை) கட்டுமானம் ஆகியவை அடங்கும். மொராதாபாத் (ராம்கங்கா) கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 330 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், 58 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கீழ், சுமார் 264 கி.மீ நீள கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் மொராதாபாதில் ராம்கங்கா நதியை சுத்திகரிக்கும் ஒன்பது நிலையங்கள் உள்ளன.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India is taking the nuclear energy leap

Media Coverage

India is taking the nuclear energy leap
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 31, 2025
March 31, 2025

“Mann Ki Baat” – PM Modi Encouraging Citizens to be Environmental Conscious

Appreciation for India’s Connectivity under the Leadership of PM Modi