2024 மார்ச் 8-10 தேதிகளில் பிரதமர் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்
மார்ச் 8 அன்று பிரதமர் அசாம் செல்கிறார். மார்ச் 9 அன்று காலை 5.45 மணியளவில் பிரதமர் காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு வருகை தருகிறார். காலை 10:30 மணிக்கு, இட்டாநகரில், அவர் 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த வடகிழக்கு' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்,
அங்கு அவர் சேலா சுரங்கப்பாதையை தேசத்திற்கு அர்ப்பணித்து, சுமார் ரூ .10,000 கோடி மதிப்புள்ள உன்னதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ .55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.
பிற்பகல் 12.15 மணியளவில் ஜோர்ஹாட் சென்றடையும் பிரதமர், புகழ்பெற்ற அஹோம் தளபதி லச்சித் போர்புகனின் அற்புதமான சிலையை திறந்து வைக்கிறார். ஜோர்ஹாட்டில் நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார், அசாமில் ரூ .17,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் பின்னர் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேற்கு வங்கத்தில் சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். இரவு 7 மணியளவில் பிரதமர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்கிறார். வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் அவர் தரிசனம் செய்கிறார். பூஜையிலும் பங்கேற்கிறார்.
மார்ச் 10 ஆம் தேதி, நண்பகல் 12 மணியளவில், ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார், அங்கு அவர் உத்தரப்பிரதேசத்தில் ரூ .34,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:15 மணியளவில் வாரணாசிக்கு செல்லும் பிரதமர், சத்தீஸ்கரில் மகாதாரி வந்தனா திட்டத்தின் கீழ் முதல் தவணையை காணொலிக் காட்சி மூலம் வழங்க உள்ளார்.