In a key step to boost connectivity in North-East, PM to inaugurate first greenfield airport in Arunachal pradesh - ‘Donyi Polo Airport, Itanagar’
Airport’s name reflects the age-old indigenous reverence to Sun (‘Donyi’) and the Moon (‘Polo’) in Arunachal Pradesh
Developed at a cost of more than 640 crore, the airport will improve connectivity and will act as a catalyst for the growth of trade and tourism in the region
PM to also dedicate 600 MW Kameng Hydro Power Station to the Nation - developed at a cost of more than Rs 8450 crore
Project will make Arunachal Pradesh a power surplus state
PM to inaugurate ‘Kashi Tamil Sangamam’ - a month-long programme being organised in Varanasi
Programme reflects the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat’
​​​​​​​It aims to celebrate, reaffirm and rediscover the age-old links between Tamil Nadu and Kashi

பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு நவம்பர் 19, 2022 அன்று செல்கிறார். இட்டா நகரில் காலை 9.30 மணியளவில் டோன்யி போலோ  விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார். 600 மெகாவாட் காமெங் நீர் மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் காசி தமிழ்சங்கமத்தை தொடங்கிவைக்க உள்ளார்.

அருணாச்சலப்பிரதேசத்தில் பிரதமர்

 வடகிழக்கு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய  நடவடிக்கையாக அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரில் முதலாவது பசுமை விமான நிலையமான டோன்யி போலோ விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பழங்காலத்திலிருந்து

பக்தியுடன் வணங்கும் சூரியன் (டோன்யி) சந்திரன் (போலோ) ஆகியவற்றை விமானநிலையத்தின் பெயர் பிரதிபலிக்கிறது.

அருணாச்சலப்பிரதேசத்தின் முதலாவது பசுமை விமான நிலையமான இது, 640 கோடி ரூபாய்க்கும் அதிக செலவில் மேற்பட்ட செலவில் 690 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2300 மீட்டர் நீள ஓடுபாதையுடன் அனைத்து பருவநிலை சூழல்களிலும்  விமான நிலையம் இயங்க முடியும். நவீன கட்டிடத்துடன் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய முனையம் எரிசக்தி திறன், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, வளங்களை மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றை மேம்படுத்தும்.

இட்டா நகரில் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய விமான நிலையம் அப்பகுதியில் போக்குவரத்தை வளர்ச்சியடைய செய்வதோடு மட்டுமல்லாமல் வர்த்தக மற்றும் சுற்றுலாவையும் வளர்ச்சியடைய செய்யும். இதனால் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஊக்கமடையும்.

இந்நிகழ்ச்சியின் போது 600 மெகாவாட் காமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் 80 கி.மீ. சுற்றளவில் 8450 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் அம்மாநிலத்திற்கு கூடுதல் மின்சாரத்தை அளிக்கும்.  பசுமை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நாட்டின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இத்திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்.

வாரணாசியில் பிரதமர்

பிரதமரின் தொலைநோக்கு வழிகாட்டுதலின்படி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை மேம்படுத்துவது அரசு கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகவுள்ளது. இந்த தொலைநோக்கைப் பிரதிபலிக்கும் மற்றொரு முயற்சியாக, காசியில் (வாரணாசி) ஒரு மாத காலம் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம்’, நவம்பர் 19 ஆம் நாள் பிரதமரால் தொடங்கி வைக்கப்படும்.

நாட்டின் மிக முக்கிய மற்றும் பழமையான இரண்டு கற்றல் இடங்களான தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையேயான பழமையான தொடர்பை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது. இரண்டு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவஞானிகள், வணிகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் போன்ற அனைத்துதரப்பினரும் ஒருங்கிணைந்து, அவர்களுடைய அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், இரு தரப்பினரும் அனுபவங்களை கற்றுக்கொள்வதற்கும், வாய்ப்பு அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு செல்லவுள்ளனர். அவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்கின்றனர். மேலும் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக சென்று உள்ளூர் மக்களின் வர்த்தகம், தொழில் ஆர்வம் குறித்து உரையாடவுள்ளனர். இரண்டு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் பொருட்கள், புத்தகங்கள், ஆவண படங்கள், சமையல், கலைப் பொருட்கள், வரலாறு, சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை ஒரு மாத காலத்திற்கு காசியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

 சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை  இணைந்து இக்கலாச்சார நிகழ்ச்சியை ஒரு மாத காலத்திற்கு நடத்துகின்றன.

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi