முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 30 அன்று நண்பகல் 12 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் வெளியிடுவார். இதற்கான நிகழ்வு ஐதராபாதின் கச்சிபௌலியில் உள்ள அன்வயா மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
பிரதமரால் வெளியிடப்படவுள்ள நூல்கள்:
(i) "வெங்கையா நாயுடு - சேவையே வாழ்க்கையாய்" என்ற தலைப்பில் முன்னாள் குடியரசு துணைத்தலைவரின் வாழ்க்கை வரலாறு. தி இந்து, ஐதராபாத் பதிப்பின் முன்னாள் இல்லுறை ஆசிரியர் திரு எஸ். நாகேஷ் குமாரால் எழுதப்பட்டது.
(ii) "கொண்டாடும் பாரதம் - இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராக திரு எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையும் செய்தியும்." காலவரிசையிலான புகைப்படங்கள். தொகுத்தவர், இந்தியக் குடியரசு துணைத்தலைவரின் முன்னாள் செயலாளர் டாக்டர் ஐ. வி. சுப்பாராவ்.
(iii) "மாபெரும் தலைவர் - திரு எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையும் பயணமும்" என தலைப்பிடப்பட்ட படங்களால் சித்தரிக்கப்படும் வாழ்க்கை வரலாறு. தெலுங்கில் திரு சஞ்சய் கிஷோரால் எழுதப்பட்டது.