தில்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி கலந்துகொள்கிறார். தில்லி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வளாகப் பன்னோக்கு அரங்கில், காலை 11 மணியளவில் இந்த விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, தில்லி பல்கலைக்கழகத்தின் கணினி மையம், தொழில்நுட்பப்புலக் கட்டிடம், பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்பட உள்ள அகாடமி பிரிவு கட்டிடம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
தில்லி பல்கலைக்கழகம் 1922-ம் ஆண்டு மே முதல் தேதி அன்று நிறுவப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில், பல்கலைக்கழகம் பெரும் வளர்ச்சியடைந்து, 86 துறைகள், 90 கல்லூரிகள், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் என பெருமளவில் விரிவடைந்துள்ளது. நாட்டு நிர்மாணத்தில் இந்தப் பல்கலைக்கழகம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது.