ஒரே சமுத்திர உச்சிமாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (11, பிப்ரவரி) பிற்பகல் 2.30 மணி அளவில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து, தென்கொரியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.
பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த ஒற்றை சமுத்திர உச்சி மாநாடு, அந்நாட்டின் பிரஸ்ட் நகரில், ஐநா மற்றும் உலக வங்கி ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. ஆரோக்கியமான மற்றும் நீடித்த சமுத்திர சூழல் முறையைப் பாதுகாத்து ஆதரவளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமுதாயத்தை திரட்டும் நோக்கில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.