குஜராத் மாநிலம் வட்டாலில் நவம்பர் 11 அன்று காலை 11.15 மணியளவில் நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.
வட்டாலில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் பல தசாப்தங்களாக மக்களின் சமூக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.