பிகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 21 செப்டம்பர் 2020 திங்கட்கிழமையன்று காணொளி மாநாடு மூலமாக அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.
பிகாரில் உள்ள அனைத்து 45945 கிராமங்களும் கண்ணாடி இழை வழி இணைய சேவை மூலம் இணைக்கப்படும் வகையில், கண்ணாடி இழை வழி சேவையையும் திரு.நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
நெடுஞ்சாலைத் திட்டங்கள்
இந்த 9 நெடுஞ்சாலை திட்டங்களும், 350 கிலோ மீட்டர் நீள சாலை தொடர்புடையவை. 14,258 கோடி ரூபாய் மதிப்பிலானவை.
மாநிலத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்ட தொடர்பு வசதி, போக்குவரத்து வசதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை கிடைக்க இந்த சாலைகள் உதவுவதோடு பிகாரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மக்கள் போக்குவரத்தும், சரக்குப் போக்குவரத்தும் கணிசமாக அதிகரிக்கும் குறிப்பாக அண்டை மாநிலங்களான உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுடனான போக்குவரத்து வசதி அதிகரிக்கும்.
பிகாரில் கணிசமான கட்டமைப்பு வளர்ச்சிக்காக 2015 ஆம் ஆண்டில் பிரதமர் சிறப்பு தொகுப்பு ஒன்றை அறிவித்திருந்தார். 54,700 கோடி ரூபாய் மதிப்பிலான 75 திட்டங்களும் இதில் அடங்கும். இவற்றுள் பதிமூன்று திட்டங்கள் நிறைவடைந்து விட்டன. 38 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை/ ஏலம்/அனுமதி அளித்தல் ஆகிய கட்டங்களில் உள்ளன.
இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது பிகாரில் உள்ள அனைத்து ஆறுகள் மீதும், இருபத்தோராம் நூற்றாண்டு வரையறைகளின்படி பாலங்கள் கட்டப்பட்டிருக்கும். முக்கியமான அனைத்து நெடுஞ்சாலைகளும் விரிவாக்கப்பட்டு, வலுவாக்கப்பட்டிருக்கும்.
பிரதமர் அறிவித்த சிறப்பு தொகுதியின் கீழ் கங்கை நதியின் மீது 17 பாலங்கள் கட்டப்பட்டிருக்கும். 62 வழித்திறன் கொண்டதாக இருக்கும். இவ்வாறாக மாநிலத்தில் ஆறுகளின் மீது சராசரியாக ஒவ்வொரு 25 கிலோமீட்டர் தொலைவிற்கும் ஒரு பாலம் அமைக்கப்பட்டிருக்கும்.
திட்டங்கள் பின்வருமாறு
என் ஹெச் 31 பக்தியார்பூர் – ரஜவ்ளி பகுதியில் 1149.55 கோடி ரூபாய் மதிப்பில் 48.2 மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு 4 வழிப் பாதை
என் ஹெச் 31 பக்தியார்பூர் – ரஜவ்ளி பகுதியில் 2650.76 கோடி ரூபாய் மதிப்பில் 50.89 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4 வழிப் பாதை
என் ஹெச் 30 ஆரா–மோகானியா பகுதியில் 54.53 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இபி சி மோடிலான 885.41 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிப்பாதை
என் ஹெச் 30 ஆரா–மோகானியா பகுதியில் 60.80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இபிசி மோடிலான 855.93 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிச்சாலை
என் ஹெச் 131 ஏ நரேன்புர்- பூர்னியா பகுதியில் 49 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஹெச் ஏ எம் மோடிலான 2288 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிச்சாலை
என் ஹெச் 131 ஜி பாட்னா ரிங் ரோடில் (கனோலி- ராம் நகர்) பகுதியில் 39 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இபிசி மோடிலான 913.15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு வழிச்சாலை
என் ஹெச் 19 பாட்னாவில், கங்கை நதியின் பல்வேறு இடங்களை அடையும் வகையிலான பாதைகள் கொண்ட 14.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 2926.42 கோடி ரூபாய் மதிப்பிலான் 4 வழி புதிய பாலம் (தற்போதைய எம் ஜி சேதுவுக்கு இணையாக)
என் ஹெச் 106 கோசி நதியின் பல்வேறு இடங்களிலான பாதைகள் கொண்ட 28.93 கிலோ மீட்டர் நீளம் கொண்ட, இபிசி மோடிலான, 1478.40 கோடி ரூபாய் மதிப்பிலான 4 வழி புதிய பாலம்
என் ஹெச் 131பி கங்கை நதியின் பல்வேறு இடங்களிலான பாதைகள் கொண்ட 4.445கிலோ மீட்டர் நீளம் கொண்ட, 1110.23 கோடி ரூபாய் மதிப்பிலான 4 வழி புதிய பாலம் (தற்போதைய விக்ரமஷிலா சேதுவுக்கு இணையாக)
கண்ணாடி இழை வழி இணைய சேவை
இத்திட்டம் பிகாரின் அனைத்து 45,945 கிராமங்களையும் இணைக்கும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இதனால் மாநிலத்தின் தொலைதூர மூலையில் உள்ள இடத்தையும் டிஜிட்டல் புரட்சி சென்றடையும்.
தொலைத்தொடர்புத் துறை, மின்னணு தொலைத்தகவல் தொடர்பு அமைச்சகம், பொது சேவை மையங்கள் (சி எஸ் சி) ஆகியவை ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பிகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 38121 சி எஸ் சி மையங்கள் உள்ளன. இம்மையங்கள் தங்களது பணியாளர்களைப் பயன்படுத்தி
இத்திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், பிகாரில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சாதாரண குடிமக்களுக்கும், கண்ணாடி இழை வழி இணைய சேவை கிடைக்கும் வகையில், கண்ணாடி இழை வழி இணைய சேவையை நடத்தவும் உதவுவார்கள். ஆரம்பப் பள்ளிகள், அங்கன்வாடி அமைப்புகள், ஆஷா பணியாளர்கள், ஜீவிகா தீதி போன்ற அரசு அமைப்புகளுக்கு வைஃபை வசதி ஒன்றும் 5 இலவச இணைப்புகளும் அளிப்பதும் இத்திட்டத்தில் அடங்கும்