Transportation is the key to development for any city and any country. India is one of the world's countries where urbanization is taking place at a fast pace: Prime Minister Modi
PM Modi reiterates the government’s vision of ‘Housing for All’ by 2022 when India celebrates its 75th year of independence
After 2014 we decided that the speed of laying the metro line would also increase and scale would also increase: Prime Minister
From Kargil to Kanyakumari, Kutch to Kamrup, if you travel, you will know at what speed and at how many levels the work is going on: PM Modi
Our focus is on creating next-gen infrastructure: PM Modi
PM Modi reiterates the Union Government's vision of "Housing For All" by 2022

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மகாராஷ்டிரா பயணத்தின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற போக்குவரத்து தொடர்பான முக்கிய திட்டங்களை இன்று (18.12.2018) தொடங்கி வைத்தார்.

கல்யாணில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் இரண்டு முக்கியமான மெட்ரோ பாதைகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இவை தானே – பிவான்டி – கல்யாண் மெட்ரோ மற்றும் தஹிசார் – மிரா – பயாண்டெர் மெட்ரோ. இந்த இரண்டு பாதைப் பணிகளும் நிறைவடையும் போது இப்பகுதியில் மிக அதிகமாக பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

கல்யாணில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் நலிவடைந்தோர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு 90,000 வீடுகள் கட்டும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். கல்யாணில் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.33,000 கோடியாகும்.

புனே-யில் பிரதமர் புனே மெட்ரோ 3-ம் கட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கல்யாணில் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்கு மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து வேகப்படுத்தி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை அவர் வலியுறுத்தினார்.

புனே-யில் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், போக்குவரத்து தொடர்புக்கான கட்டமைப்பு வசதிகளில், அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்றார். அடுத்த தலைமுறைக்கு அடிப்படைக் கட்டமைப்பிலும், போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைப்பிலும் இந்தியா கவனத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடங்குக இந்தியா, அடல் புதிய கண்டுப்பிடிப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தியா தொழில்நுட்ப மையமாக உருவாகி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech at Kalyan, Maharashtra

Click here to read full text speech at Pune, Maharashtra

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi