Scheme draws inspiration from PM’s vision to support and skill the people engaged in traditional crafts
‘PM Vishwakarma’ will be fully funded by the Union Government with an outlay of Rs 13,000 crore
Wide ambit of ‘PM Vishwakarma’ - it will cover eighteen crafts
Vishwakarmas to be provided recognition through PM Vishwakarma certificate and ID card
Vishwakarmas to also be given credit support and training for skill upgradation

பாரம்பரிய கைவினைக் கலைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு திறன் அளிப்பதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெறுகிறது.

 

ரூ.13,000 கோடி செலவில் 'பிரதமரின் விஸ்வகர்மா' திட்டத்துக்கு மத்திய அரசு முழு நிதி வழங்கும்.

 

'பி.எம்.விஸ்வகர்மா'வின் பரந்த வரம்பு - இது பதினெட்டு கைவினைக் கலைகளை உள்ளடக்கும்

 

பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் விஸ்வகர்மாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்

 

விஸ்வகர்மாக்களுக்கு கடன் உதவியும், திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

 

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 17  அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி, துவாரகாவில் உள்ள இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் "பிஎம் விஸ்வகர்மா" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பாரம்பரிய கைவினைப் பொருட்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பது பிரதமரின் தொடர்ச்சியான நோக்கமாக இருந்து வருகிறது. கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், பழங்கால பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், உள்ளூர் தயாரிப்புகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் செழிக்கவும் இந்தக் கவனம் செலுத்தப்படுகிறது.

 

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.13,000 கோடி நிதி வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பயோமெட்ரிக் அடிப்படையிலான பி.எம் விஸ்வகர்மா போர்ட்டலைப் பயன்படுத்தி பொது சேவை மையங்கள் மூலம் விஸ்வகர்மாக்கள் இலவசமாக பதிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி சம்பந்தப்பட்ட திறன் மேம்பாடு, உபகரண ஊக்கத்தொகை ரூ .15,000, ரூ.1 லட்சம் (முதல் தவணை) மற்றும் ரூ .2 லட்சம் (இரண்டாவது தவணை) வரை பிணையற்ற கடன் ஆதரவு 5% சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்படும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு வழங்கப்படும்.

விஸ்வகர்மாக்கள் தங்கள் கரங்கள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய திறன்களை வலுப்படுத்துவதையும் வளர்ப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தையும் அணுகலையும் மேம்படுத்துவதிலும், அவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் பிரதமர் விஸ்வகர்மாவின் முக்கிய கவனம் உள்ளது.

இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவை வழங்கும். பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின்  கீழ் பதினெட்டு பாரம்பரிய கைவினைக் கலைகள் சேர்க்கப்படும். இவர்களில் (i) தச்சர் ; (ii) படகு தயாரிப்பாளர்; (iii) கவசம்; (iv) கொல்லர்; (v) சுத்தியல்  மற்றும் கருவிகள் செய்பவர்; (vi) பூட்டு தொழிலாளி; (vii) பொற்கொல்லர்; (viii) குயவர்; (ix) சிற்பி, கல் உடைப்பவர்; (x) காலணிகள் தைப்பவர் (செருப்புத் தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்); (xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி); (xii) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பாளர் / கயிறு நெசவாளர்; (xiii) பொம்மை மற்றும் பொம்மை தயாரிப்பாளர் (பாரம்பரியம்); (xiv) முடிதிருத்துபவர்; (xv) மாலை செய்பவர்; (xvi) சலவைத் தொழிலாளி; (xvii) தையல்காரர்; (xviii) மீன்பிடி வலை தயாரிப்பாளர்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Biz Activity Surges To 3-month High In Nov: Report

Media Coverage

India’s Biz Activity Surges To 3-month High In Nov: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 24, 2024
November 24, 2024

‘Mann Ki Baat’ – PM Modi Connects with the Nation

Driving Growth: PM Modi's Policies Foster Economic Prosperity