வருங்காலத்திற்கான இலக்கு மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC) பங்குதாரர்கள் பங்கேற்கும், நாளை நடைபெறவுள்ள கருத்துதிர்ப்பு அமர்வில்பிரதமர் திரு. நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.
கடன் பொருள்கள் மற்றும் விநியோக செயல்திறன் மிக்க மாதிரிகள், தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி, நிதித் துறையின் நிலைத்தன்மைக்கான விவேகமான நடைமுறைகள் போன்றவை குறித்து நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
உள்கட்டமைப்பு, வேளாண்மை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திக்கு நிதியளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் வங்கித் துறை முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்க பெரும் பங்களிக்கும்.
மத்திய அரசின் மூத்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்பர்.