கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (15.03.2020) மாலை ஐந்து மணி அளவில் காணொலி மூலம் கலந்துரையாடுவார். பிராந்தியத்தில் கொவிட் -19 தொற்று பரவாமல் தடுக்க பொதுவான, வலுவான உத்தி ஒன்றை வகுப்பது தொடர்பாக அனைத்து சார்க் நாடுகளுடன் காணொலி மூலம் அவர் இந்தியாவின் சார்பில் கலந்துரையாடுவார்.