Quoteநாடு முழுவதும் 48 மையங்களில் நடைபெறவுள்ள ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்றில் 12,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம் பெறுகின்றனர்
Quote25 அமைச்சகங்களின் வெளியிட்ட 231 அறிக்கைகளுக்கு மாணவர்கள் தீர்வு காண உள்ளனர்
Quoteஇந்த ஆண்டு ஹேக்கத்தானில், 44,000 குழுக்களிடமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன – இது முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானுடன் ஒப்பிடும்போது சுமார் ஏழு மடங்கு அதிகரிப்பு
Quoteவிண்வெளி தொழில்நுட்பம், ஸ்மார்ட் கல்வி, பேரிடர் மேலாண்மை, ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் தீர்வுகளை வழங்குவார்கள்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்றில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, 19 டிசம்பர் அன்று இரவு 9:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  என்பது அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், தொழில்துறைகள் மற்றும் பிற அமைப்புகளின் நெருக்கடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நாடு தழுவிய முன்முயற்சியாகும். 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. கடந்த ஐந்து நிகழ்வுகளில், பல புதுமையான தீர்வுகள் வெவ்வேறு களங்களில் வெளிவந்துள்ளன மற்றும் நிறுவப்பட்ட புத்தொழிலில் நிறுவனங்களாக தனித்து நிற்கின்றன.

 

இந்த ஆண்டு, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்று டிசம்பர் 19 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதற்காக 44,000 குழுக்களிடமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன. இது முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்றுடன் ஒப்பிடும்போது சுமார் ஏழு மடங்கு அதிகமாகும். நாடு முழுவதும் 48 மையங்களில் நடைபெறும் இந்த இறுதிச் சுற்றில் 12,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் பங்கேற்க உள்ளனர். விண்வெளி தொழில்நுட்பம், ஸ்மார்ட் கல்வி, பேரிடர் மேலாண்மை, ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தீர்வுகளை வழங்குவதற்காக இந்த ஆண்டு இறுதிச் சுற்றுக்கு மொத்தம் 1,282 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பங்கேற்கும் குழுக்கள் 25 மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளின் 51 துறைகளால் வெளியிடப்பட்ட 231 (176 மென்பொருள் மற்றும் 55 வன்பொருள்) சிக்கல் மிகுந்த அறிக்கைகளை எதிர்கொண்டு தீர்வுகளை வழங்கும். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 க்கான மொத்த பரிசு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சிக்கல் மிகுந்த அறிக்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
6 chip manufacturing projects approved; to generate over 27,000 direct jobs: Minister

Media Coverage

6 chip manufacturing projects approved; to generate over 27,000 direct jobs: Minister
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2025
July 23, 2025

Citizens Appreciate PM Modi’s Efforts Taken Towards Aatmanirbhar Bharat Fuelling Jobs, Exports, and Security