ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி வழங்கல் திட்ட பயனாளிகளுடன் 2021 செப்டம்பர் 6 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவுள்ளார்.
தகுதியுடைய தனது அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்துகளை ஹிமாச்சலப் பிரதேசம் வழங்கியுள்ளது. கடினமான பகுதிகள் மீது கவனம் செலுத்துவதற்கான புவிசார் முன்னுரிமை, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்றது உள்ளிட்ட முயற்சிகளை அம்மாநிலம் எடுத்தது.
பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிற்சாலை பணியாளர்கள், தினக்கூலிகள் மீது சிறப்பு கவனம் செலுத்திய மாநில அரசு, ‘சுரக்ஷா கி யுக்தி - கொரோனோவில் சே முக்தி’ உள்ளிட்ட சிறப்பு பிரச்சாரங்களை இந்த மைல்கல்லை எட்டுவதற்காக முன்னெடுத்தது.