பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 மே 21 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் வாரணாசியின் மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி சுகாதார ஊழியர்களுடன் உரையாட உள்ளார்.
டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தின் கூட்டு முயற்சிகள் மூலம் சமீபத்தில் தொடங்கப்பட்ட பண்டிட் ராஜன் மிஸ்ரா கொவிட் மருத்துவமனை உட்பட வாரணாசியில் உள்ள பல்வேறு கொவிட் மருத்துவமனைகளின் பணிகளை பிரதமர் ஆய்வு செய்வார். இந்த மாவட்டத்தில் உள்ள கொவிட் அல்லாத மருத்துவமனைகளின் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்வார்.
வாரணாசியில் கொவிட்டின் இரண்டாவது அலையைச் சமாளிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் எதிர்காலத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமர் கலந்துரையாடுவார்.