பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஜனவரி 22-ம் தேதி காலை 11 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடவுள்ளார்.
இந்த உரையாடலின் போது, மாவட்டங்களில் அரசு திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாக கருத்துக் கேட்பார். செயல்திறனை மதிப்பாய்வு செய்யவும், எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியவும் இது உதவும்.
அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்து, மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதை இக்கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்க பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்குமான அரசின் உறுதிப்பாட்டோடு இது இணைந்துள்ளது.