பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 டிசம்பர் 16 அன்று மாலை 4 மணிக்கு ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையின் பயனாளிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடுவதுடன், இந்நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையின் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரை, அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.