PM to disburse Seed Capital Assistance for over one lakh SHG members
Innovation and strength of Indian food processing industry to be showcased during World Food India 2023
Participants from over 80 countries, including CEOs of prominent food processing companies to attend the event
Key attraction: A unique culinary experience through Food Street featuring traditional Indian cuisine

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை  காலை 10 மணிக்கு 'உலக உணவு இந்தியா 2023'  இரண்டாவது பதிப்பு எனும் மிகப்பெரிய உணவுக் கண்காட்சி நிகழ்வினை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்ப கட்ட மூலதன உதவியை பிரதமர் வழங்கவுள்ளார்.

 

 மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் தரமான உற்பத்தி மூலம் சுய உதவிக் குழுக்கள் சந்தையில் சிறந்த விலையைப் பெற இந்த ஆதரவு உதவும். உலக உணவு இந்தியா 2023 கண்காட்சியின் ஒரு பகுதியாக உணவு தெரு அரங்குகளை  பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

இதில் பிராந்திய உணவு வகைகள் மற்றும் அரச சமையல் பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெறும், இதில் 200 க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் பங்கேற்று பாரம்பரிய இந்திய உணவுகளை வழங்குவார்கள், இது ஒரு தனித்துவமான சமையல் அனுபவமாக இருக்கும்.

 

இந்த நிகழ்வு இந்தியாவை 'உலகின் உணவு கூடை' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

 

இது அரசாங்க அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விவாதங்களில் ஈடுபடவும், கூட்டாண்மைகளை நிறுவவும், வேளாண் உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு கட்டமைப்பு மற்றும் வணிக தளத்தை வழங்கும்.

 

முதலீடு மற்றும் எளிதாக தொழில் தொடங்குவதை மையமாகக் கொண்டு தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை மாநாடுகள் நடைபெறும்.

 

இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையின் கண்டுபிடிப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்படும். நிதி மேம்பாடு, தர உத்தரவாதம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உணவுப் பதப்படுத்தும் தொழிலின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 48 அமர்வுகள் இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன.

 

இந்த நிகழ்ச்சியில் முக்கிய உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பையும் கொண்டிருக்கும். இந்த நிகழ்வில் நெதர்லாந்து நட்பு நாடாக செயல்படும், ஜப்பான் இந்த நிகழ்வின் மைய நாடாக இருக்கும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi