2022, ஜூன் 23 காலை 10.30 மணிக்கு தொழில் வர்த்தக புதிய வளாகத்தில் வணிக (வாணிஜ்ய) பவனை பிரதமர் தொடங்கிவைப்பார். இந்த நிகழ்ச்சியில் வருடாந்தர வணிகப் பகுப்பாய்வுக்கான தேசிய இறக்குமதி-ஏற்றுமதி ஆவணம் எனும் இணைய பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பாக தேவைப்படும் அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே இடத்தில் அறிந்துகொள்வதற்காக இந்த இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடியிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.
இந்தியா கேட் அருகே கட்டப்பட்டுள்ள இந்த வணிக பவன், எரிசக்தி சேமிப்பில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் பொலிவுறு கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. தொழில் வர்த்தக அமைச்சகத்தின்கீழ் உள்ள இரண்டு துறைகளால், அதாவது வணிகத் துறை மற்றும் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நவீன அலுவலக வளாகமாக இது செயல்படும்.