Quoteபுதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2023 டிசம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாள் வருடாந்திர ஜிபிஏஐ உச்சிமாநாட்டை இந்தியா நடத்துகிறது
Quoteஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல தரப்பினரின் முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிக்கிறது

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023, 12 டிசம்பர் அன்று மாலை 5 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாட்டைத் தொடங்கி வைப்பார்.

ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல்வேறு சம்பந்தப்பட்டவர்களின் முன்முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.

2020-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், ஜி.பி.ஏ.ஐ-ன் தற்போதைய ஆதரவுத் தலைவராகவும், 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.க்கான முன்னணித் தலைவராகவும் உள்ளது. இந்தியா 2023, டிசம்பர் 12 முதல் 14, வரை வருடாந்திர ஜி.பி.ஏ.ஐ உச்சிமாநாட்டை நடத்துகிறது

செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய சுகாதாரம், கல்வி மற்றும் திறன், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு ஆளுமை மற்றும் எம்.எல் பட்டறை போன்ற பல்வேறு தலைப்புகளில் பல அமர்வுகள் இந்த உச்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்யப்படும்.  ஆராய்ச்சி கருத்தரங்கு, மாற்றத்திற்கான செயற்கை நுண்ணறிவு விருது, இந்தியா செயற்கை நுண்ணறிவு கண்காட்சி ஆகியவை இந்த உச்சி மாநாட்டின் பிற நடவடிக்கைகளாகும்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 50-க்கும் அதிகமான ஜிபிஏஐ வல்லுநர்களும் 150-க்கும் அதிகமான பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.  மேலும், இன்டெல், ரிலையன்ஸ் ஜியோ, கூகுள், மெட்டா, ஏடபிள்யூஎஸ், யோட்டா, நெட்வெப், பேடிஎம், மைக்ரோசாப்ட், மாஸ்டர்கார்டு, என்ஐசி, எஸ்டிபிஐ, ஜியோ ஹாப்டிக், பாஷினி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உலகெங்கிலும் உள்ள மாற்றத்திற்கான முன்னணி செயற்கை நுண்ணறிவாளர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், இளையோர் செயற்கை நுண்ணறிவு முன்முயற்சி மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் கீழ் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவார்கள்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India's services sector 'epochal opportunity' for investors: Report

Media Coverage

India's services sector 'epochal opportunity' for investors: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 9, 2025
July 09, 2025

Appreciation by Citizens on India’s Journey to Glory - PM Modi’s Unstoppable Legacy