Quoteஇந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
QuoteITU-WTSA முதல் முறையாக இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் நடத்தப்படுகிறது
Quoteஐடியு-டபிள்யூடிஎஸ்ஏ-ல் பங்கேற்க 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000 தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்
Quoteஇந்தியா மொபைல் காங்கிரஸின் 8 வது பதிப்பின் கருப்பொருள் "எதிர்காலம் இப்போது" ஆகும்
Quoteஇந்தியா மொபைல் காங்கிரஸ் 2024, 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், சுமார் 900 ஸ்டார்ட்அப்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பை காட்சிப்படுத்தும்

அக்டோபர் 15-ம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை (WTSA) 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இன் 8 வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

WTSA என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஐடியு-டபிள்யூடிஎஸ்ஏ மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை முன்னோடிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.

WTSA 2024 ஆனது 6G, AI, IoT, Big Data, சைபர் செக்யூரிட்டி போன்ற அடுத்த தலைமுறை முக்கிய தொழில்நுட்பங்களின் தரநிலைகளைப் பற்றி விவாதிக்கவும் தீர்மானிக்கவும் நாடுகளுக்கு ஒரு தளத்தை வழங்கும். இந்த நிகழ்வை, இந்தியாவில் நடத்துவது உலகளாவிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதிலும், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான பாதையை அமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்க நாட்டிற்கு ஒரு வாய்ப்பை வழங்கும். இந்திய புத்தொழில்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளை வளர்ப்பதில் முக்கியமான நுண்ணறிவுகளைப் பெற உள்ளன.

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024, இந்தியாவின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வெளிப்படுத்தும், அங்கு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் வட்ட பொருளாதாரத்தில்  முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துவார்கள், மேலும் 6G, 5G யூஸ்-கேஸ் ஷோகேஸ், கிளவுட் & எட்ஜ் கம்ப்யூட்டிங், IoT, குறைக்கடத்திகள், சைபர் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், சாட்காம் மற்றும் மின்னணு உற்பத்தி ஆகியவற்றில் கவனத்தை ஈர்ப்பார்கள்.

ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமான இந்தியா மொபைல் காங்கிரஸ், தொழில், அரசு, கல்வியாளர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பிற முக்கிய பங்குதாரர்களுக்கான புதுமையான தீர்வுகள், சேவைகள் மற்றும் அதிநவீன பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதற்கான உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட தளமாக மாறியுள்ளது. இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ல் 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், சுமார் 900 புத்தொழில்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பு இடம்பெறும். இந்த நிகழ்வு 900-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதையும், 100-க்கும் மேற்பட்ட அமர்வுகளை நடத்துவதையும், 600-க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் இந்திய பேச்சாளர்களுடன் கலந்துரையாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India Inc gets faster: Work-in-progress cycle drops to decade low at 14 days

Media Coverage

India Inc gets faster: Work-in-progress cycle drops to decade low at 14 days
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2025
July 23, 2025

Citizens Appreciate PM Modi’s Efforts Taken Towards Aatmanirbhar Bharat Fuelling Jobs, Exports, and Security