Quoteபிராந்தியத்தில் இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
Quoteதெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய முனைய நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்
Quoteகிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில் பிரிவு கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி  மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிராந்தியத்தில் இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைப்பதோடு, கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.

பதான்கோட் - ஜம்மு - உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா, போக்பூர் சிர்வால் - பதான்கோட், படாலா - பதான்கோட் மற்றும் பதான்கோட் முதல் ஜோகிந்தர் நகர் வரையிலான 742.1 கிமீ நீளமுள்ள ஜம்மு ரயில்வே கோட்டத்தை உருவாக்குவது, ஜம்மு காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீண்ட பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும். மக்களின் அபிலாஷை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் இது, வேலை வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாவை மேம்படுத்துவதுடன்,  பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சர்லபள்ளி புதிய முனைய நிலையம், சுமார் ரூ.413 கோடி செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய  முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முனையம், நல்ல பயணிகள் வசதிகளுடன், செகந்திராபாத், ஹைதராபாத் மற்றும் கச்சேகுடா போன்ற நகரத்தில் இருக்கும் பயிற்சி முனையங்களில் நெரிசலைக் குறைக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில் பிரிவு கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar

Media Coverage

'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 30, 2025
March 30, 2025

Citizens Appreciate Economic Surge: India Soars with PM Modi’s Leadership