உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 29 பிப்ரவரி 2020-ல் நடைபெற உள்ள மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் மூத்த குடிமக்கள் (தேசிய முதியோர் உதவித் திட்டத்தின் கீழ்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான (ஏடிஐபி திட்டத்தின் கீழ்) வாழ்வாதார உதவிகள் மற்றும் கருவிகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்க உள்ளார்.
பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்பட உள்ள கருவிகள் மற்றும் நிதியுதவித் தொகை அடிப்படையில், இந்த முகாம் நாட்டிலேயே மிகப் பெரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமாக அமைய உள்ளது.
இந்த மாபெரும் முகாமில், 26,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, சுமார் 56,000-க்கும் மேற்பட்ட, பல்வேறு வகையான உபகரணங்களும் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளன. இந்த நிதியுதவி மற்றும் உபகரணங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.19 கோடியாகும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவே இந்த நிதியுதவியும். உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.