சுமார் ரூ.2700 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம் 123 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது
இது இந்தியாவின் மிகப்பெரிய எம்.ஐ.சி. இ (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இலக்காகும் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்றாகும்
புதிய மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், வட்ட வடிவில் திறந்தவெளி அரங்குகள் போன்ற பல அதிநவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன
ஒரு பெரிய கட்டிடக்கலை அதிசயமான மாநாட்டு அரங்கில் பெரிய அளவிலான சர்வதேச கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தலாம்
சங்கு வடிவத்தில் உருவாக்கப்பட்ட இது இந்தியாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல கட்டிடக்கலை கூறுகளை உள்ளடக்கியது
புதிதாக கட்டப்படும் இந்த வளாகம் இந்தியாவை உலகளாவிய வணிக இலக்காக ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 ஜூலை 26 அன்று பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (ஐ.இ.சி.சி) கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. பிரகதி மைதானத்தில் உள்ள பழைய மற்றும் காலாவதியான வசதிகளை மறுசீரமைத்த இந்த திட்டம், சுமார் 2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. சுமார் 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஐ.இ.சி.சி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய எம்.ஐ.சி.இ (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு கிடைக்கக்கூடிய மூடிய இடத்தைப் பொறுத்தவரை, ஐ.இ.சி.சி வளாகம் உலகின் சிறந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

 

பிரகதி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐ.இ.சி.சி வளாகத்தில் மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், வட்ட வடிவில் திறந்தவெளி அரங்குகள் (ஆம்பிதியேட்டர்கள்) உள்ளிட்ட பல அதிநவீன வசதிகள் உள்ளன.

 

மாநாட்டு மையம் பிரகதி மைதான வளாகத்தின் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டிடக்கலை அதிசயமாகும், இது பெரிய அளவிலான சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பிற மதிப்புமிக்க நிகழ்வுகளை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல கூட்ட அறைகள், ஓய்வறைகள், ஆடிட்டோரியங்கள், ஆம்பிதியேட்டர் மற்றும் வணிக மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பரந்த அளவிலான நிகழ்வுகளை நடத்தும் திறன் கொண்டது. இதன் கம்பீரமான பல்நோக்கு அரங்கம் மற்றும் முழுமையான மண்டபம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஏழாயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதியைக் கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸின் இருக்கை திறனை விட பெரியது. இதன் அற்புதமான ஆம்பிதியேட்டர் 3,000 பேர் அமரும் திறன் கொண்டது.

 

  • மையம் கட்டிடத்தின் கட்டிடக்கலையின் வடிவமைப்பு இந்திய பாரம்பரியங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு, நவீன வசதிகள் மற்றும் வாழ்க்கை முறையை தழுவும் அதே நேரத்தில் அதன் கடந்த காலத்தில் இந்தியாவின் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது. கட்டிடத்தின் வடிவம் சங்கு வடிவில் உள்ளது. மாநாட்டு மையத்தின் பல்வேறு சுவர்கள் மற்றும் முகப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் 'சூரிய சக்தி', 'ஜீரோ டூ இஸ்ரோ', விண்வெளியில் நமது சாதனைகளைக் கொண்டாடும் பஞ்ச மகாபூதம் - ஆகாஷ் (ஆகாயம்), வாயு (காற்று), அக்னி (நெருப்பு), ஜல் (நீர்), பிருத்வி (பூமி) உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல கூறுகளை சித்தரிக்கின்றன.  மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு ஓவியங்கள் மற்றும் பழங்குடி கலை வடிவங்கள் மாநாட்டு மையத்தை அலங்கரிக்கின்றன.

 

மாநாட்டு அரங்கில் 5ஜி வசதியுடன் கூடிய முழுமையான வைஃபை வசதி, 10ஜி இன்ட்ராநெட் இணைப்பு, 16 மொழிகளை பயன்படுத்தி, அவரவர் விருப்பத்திற்கேற்ப மொழி பெயர்க்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பிரேட்டர் அறை, பெரிய அளவிலான வீடியோ திரைகளுடன் கூடிய மேம்பட்ட ஒலி-ஒளி அமைப்புகள், உகந்த செயல்பாடு மற்றும் ஆற்றல் செயல்திறனை உறுதி செய்யும் கட்டிட மேலாண்மை அமைப்பு, டிம்மிங் மற்றும் ஆக்கிரமிப்பு சென்சார்களுடன் கூடிய ஒளி மேலாண்மை அமைப்பு, அதிநவீன டி.சி.என் (டேட்டா கம்யூனிகேஷன் நெட்வொர்க்) அமைப்பு ஆகியவை மாநாட்டு அரங்கில் உள்ள பிற வசதிகளாகும். ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், ஐ.இ.சி.சி வளாகம் மொத்தம் ஏழு கண்காட்சி அரங்குகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளை நடத்துவதற்கான பல்துறை இடமாக செயல்படுகின்றன. கண்காட்சி அரங்குகள் பல்வேறு வகையான தொழில்களுக்கு இடமளிக்கும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கட்டமைப்புகள் நவீன பொறியியல் மற்றும் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாகும்.

 

ஐ.இ.சி.சி.க்கு வெளியே உள்ள பகுதியின் வளர்ச்சியும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பிரதான வளாகத்தின் அழகை பூர்த்தி செய்கிறது மற்றும் இந்த திட்டத்தில் சென்ற கவனமான திட்டமிடல் மற்றும் வளர்ச்சியின் சான்றாகும். சிற்பங்கள், நிறுவல்கள் மற்றும் சுவரோவியங்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன; இசை நீரூற்றுகள் வசீகரம் மற்றும் காட்சியின் ஒரு அம்சத்தை சேர்க்கின்றன; குளங்கள், ஏரிகள் மற்றும் செயற்கை நீரோடைகள் போன்ற நீர்நிலைகள் இப்பகுதியின் அமைதியையும் அழகியலையும் மேம்படுத்துகின்றன.

 

ஐ.இ.சி.சி.யில் பார்வையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, இது 5,500 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வசதி கொண்டது. சிக்னல் இல்லாத சாலைகள் வழியாக எளிதாக அணுகுவதால் பார்வையாளர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் அந்த இடத்தை அடைய முடியும். மேலும், ஒட்டுமொத்த வடிவமைப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது, இது ஐ.இ.சி.சி வளாகத்திற்குள் தடையற்ற இயக்கத்தை எளிதாக்குகிறது.

 

பிரகதி மைதானத்தில் புதிய ஐ.இ.சி.சி வளாகத்தின் வளர்ச்சி இந்தியாவை உலகளாவிய வணிக இடமாக மேம்படுத்த உதவும். இது தொழில் மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும். இது தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். இது அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கும் மற்றும் சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில் போக்குகளின் பரவலை ஊக்குவிக்கும். பிரகதி மைதானத்தில் உள்ள ஐ.இ.சி.சி, தற்சார்பு இந்தியாவின் உணர்வில் நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சிறப்பை பிரதிபலிக்கிறது மற்றும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi