சீரான, நீடிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய நித்தி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் 2022 ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ளது. மத்திய மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இது வழிவகுக்கும்.
புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குவார். மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை- உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தின் விவாதப்பொருளில் இடம்பெறும்.
2019 ஜூலை மாதத்திற்கு பின் இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது. கொவிட்-19 பெருந்தொற்று பின்னணியில் அதற்கு எதிராக அமிர்தகாலத்திற்குள் நாம் நுழையும் நிலையிலும் ஜி-20 அமைப்பின் தலைமையேற்று அடுத்த ஆண்டு உச்சிமாநாட்டை நடத்தும் நிலையிலும் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிர்வாக கவுன்சிலில் பிரதமர், மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நித்தி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இடம் பெறுவார்கள்.
Would be chairing the 7th Governing Council meet of @NITIAayog tomorrow, 7th August. This forum provides a great opportunity for the Centre and states to exchange views on key policy related issues and strengthen India’s growth trajectory. https://t.co/BOVn9gZIjd
— Narendra Modi (@narendramodi) August 6, 2022