அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது நிறுவன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். காணொலி காட்சி வாயிலாகக் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் சிறப்புரையாற்றுவார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் திரு அருண் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் பற்றி:
மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ன் கீழ் அதே ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. மனித உரிமைகள் எந்த வகையில் மீறப்பட்டாலும் அதனைக் குற்றமாக எடுத்துக் கொள்ளும் இந்த ஆணையம், அது குறித்து விசாரணை நடத்துகிறது. மனித உரிமைகள் மீறப்பட்ட விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் இதர நிவாரணம் மற்றும் தவறிழைத்த அரசு ஊழியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்கிறது.
At 11 AM tomorrow, 12th October, will address the 28th NHRC Foundation Day programme. The NHRC plays an important role in our nation in protecting the human rights and dignity of the marginalised.
— Narendra Modi (@narendramodi) October 11, 2021