பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெய்ப்பூர் மகாகேல் பங்கேற்பாளர்களிடையே 2023 பிப்ரவரி 5 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.
ஜெய்ப்பூர் மகாகேல் என்ற விளையாட்டு விழா 2017 ஆம் ஆண்டுமுதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஜெய்ப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மகாகேல், கபடிப் போட்டியில் கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு இது தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12, 2023 அன்று தொடங்கியது. இதில் 450-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டபேரவைத் தொகுதிகளின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 6400- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மகாகேல் அமைப்பு, ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அத்துடன் விளையாட்டை ஒரு எதிர்கால வாழ்க்கைத் தேர்வாக தேர்வு செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது.