பிரதமர் திரு நரேந்திர மோடி, கவுஹாத்தி இந்திய தொழில்நுட்ப பயிலகத்தின் (ஐஐடி) பட்டமளிப்பு உரையை இம்மாதம் 22-ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு, காணொலிக் காட்சி வாயிலாக நிகழ்த்த உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், அசாம் மாநில முதல்வர் திரு சர்பானந்த சோனோவால், மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங், கல்வித்துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் 687 பிடெக் மற்றும் 637 எம்டெக் மாணவர்கள் உட்பட 1803 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.