அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் உச்சிமாநாட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி மாலை 4:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார். ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஆகஸ்ட் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்துகிறது.
தொழிலாளர் சம்பந்தமான பல்வேறு குறிப்பிடத்தக்க விஷயங்களை விவாதிப்பதற்காக கூட்டு ஒத்துழைப்பின் உணர்வில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களை திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்யவும், மேம்பட்ட கொள்கைகளை தயாரிப்பதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மேலும் இணக்கத்தை உருவாக்க இந்த உச்சிமாநாடு உதவிகரமாக இருக்கும்.
சமூக பாதுகாப்பை உலகமயமாக்குவதற்காக சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான இ-ஷ்ரம் தளத்தை ஒருங்கிணைப்பது, மாநில அரசுகளால் இயக்கப்படும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் மூலம் மருத்துவ வசதியை மேம்படுத்துவது மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைப்பது, நான்கு தொழிலாளர் குறியீடுகளின் கீழ் விதிகளை வகுப்பது, சாலையோர பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு, பணியிடங்களில் சமமான நிலை உள்ளிட்ட நான்கு கருப்பொருட்களில் அமர்வுகள் நடைபெறும்.