ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 211-வது பிறந்த நாளை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் தாக்கூர்பாரி, ஸ்ரீதாம் தாக்கூர் நகரில் 29 மார்ச் பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெறும் மதுவா தர்ம மஹா மேளா 2022-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர், சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றுபட்ட வங்காளத்தில் தமது வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக அர்பணித்தவர் ஆவார். அவரால் தொடங்கப்பட்ட சமுதாய மற்றும் மத இயக்கம், 1860-வில் ஒரகன்டியில் (தற்போதைய பங்களாதேஷிலுள்ள) தொடங்கி, மதுவா தர்மா தோன்றுவதற்கு வழிவகுத்தது.
மதுவா தர்ம மஹா மேளா 2022, 29 மார்ச் முதல் 5 ஏப்ரல் 2022 வரை, அகில இந்திய மதுவா மஹாசங்கா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.