குஜராத்தில், ஆகஸ்ட் 13-ந் தேதியன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
தன்னார்வ வாகன-கடற்படை நவீனமயமாக்கல் திட்டம் அல்லது வாகன ஸ்கிராப்பிங் கொள்கையின் கீழ் வாகன ஸ்கிராப்பிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான முதலீட்டை ஈர்க்க இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஸ்கிராப்பிங் மையத்தின் வளர்ச்சிக்காக, ஆலங்கில் கப்பல் உடைக்கும் தொழிலால் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்புகளில் இது கவனம் செலுத்தும்.
இந்த உச்சிமாநாடு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் குஜராத் அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது குஜராத்தின் காந்திநகரில் நடைபெறும். சாத்தியமான முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், குஜராத் முதல்வரும் கலந்து கொள்கின்றனர்.
வாகன ஸ்கிராப்பிங் கொள்கை பற்றி
வாகன ஸ்கிராப்பிங் கொள்கையானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான முறையில் பொருத்தமற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை, நாடு முழுவதும் தானியங்கி சோதனை நிலையங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகளின் வடிவத்தில் ஸ்கிராப்பிங் உள்கட்டமைப்பை உருவாக்க விரும்புகிறது.