குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் டிசம்பர் 16-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசிய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உச்சி மாநாட்டில் நிறைவு அமர்வில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றுவார். இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்தும் வகையில் உச்சிமாநாடு நடைபெறும். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை முறைகள், அவற்றை பின்பற்றுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த அனைத்து தேவையான தகவல்களும் அளிக்கப்படும்.
விவசாயிகள் நலனுக்காக பிரதமரின் தொலைநோக்குப் அடிப்படையில் அரசு நடைபெற்று வருகிறது. உற்பத்தித் திறனை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களது வேளாண் ஆற்றலை அதிகப்படுத்த முடியும். வேளாண்மையை மாற்றி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நீடித்த நடைமுறை, செலவு குறைப்பு, சந்தை அணுக்கம், விவசாயிகளுக்கு சிறந்த மதிப்பை வழங்குதல் ஆகிய முன்முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம். இடுபொருட்கள் கொள்முதல், வேளாண்மை செலவு குறித்த விவசாயிகளின் சார்பை குறைக்கும் முக்கிய கருவியாகும். தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான பாரம்பரிய அடிப்படையில் மண் வளத்தை அதிகரிக்க இது வகை செய்யும். நாட்டு பசுக்கள் அவற்றின் சாணம் மற்றும் சிறுநீர், நிலத்திற்கு தேவையான ஊட்டச்சத்து உரத்தை வழங்குகின்றன. தழை உரங்கள், உயிரி உரங்கள் ஆகிய பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுதல் அல்லது ஆண்டு முழுவதும், மிக குறைந்த தண்ணீர் கிடைக்கும் காலங்களிலும் மண்ணை பசுமையான தாவரங்களால் நிரப்புதல் ஆகியவை முதல் ஆண்டிலிருந்தே நீடித்த உற்பத்தியை உறுதி செய்யும். இயற்கை வேளாண்மையை கவனத்தில் கொண்டு, இந்த உத்திகளை விளக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இந்தத் தகவலை வழங்க குஜராத் மாநில அரசு தேசிய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இந்த 3 நாள் உச்சிமாநாடு நடைபெறுகிறது. உச்சிமாநாட்டில், ஐசிஏஆர், கிருஷி அறிவியல் மையங்கள், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை போன்ற மத்திய நிறுவனங்கள் வழியாக மாநிலங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காணும் விவசாயிகள் தவிர நாடு முழுவதிலுமிருந்து 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.