பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் அவர்களின் 1111-வது ‘அவதாரம் மஹோத்சவ்’ தினமான 28 ஜனவரி அன்று காலை 11.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் பிரதமர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் அவர்களை ராஜஸ்தான் மாநில மக்கள் வழிபடுகின்றனர். அவரை பின்பற்றுபவர்கள் நமது நாடுமுழுவதும் உள்ளனர். சமூக சேவைகளுக்காக அவரை என்றென்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர்.